இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் மற்றும் 100 பில்லியன் டாலர் பணக்கார கிளப்பில் இருக்கும் ஒரே இந்தியர் என்ற பெருமை உடைய முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நிலையில் தற்போது திருமணத் தேதி வெளியாகியுள்ளது.
Anant Ambani மற்றும் Radhika Merchant ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குறித்த அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது மூலம் இருவரின் திருமண நாள் வெளியாகியுள்ளது.

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், தற்போது வைரலான திருமண அழைப்பிதழின்படி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அதாவது Pre Weeding நிகழ்ச்சிகள் அனைத்தும் மார்ச் 1, 2024 அன்று தொடங்கி மார்ச் 3, 2024 வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் அம்பானி குடும்பத்தின் கோட்டையான குஜராத் மாநில ஜாம்நகரில் நடக்க உள்ளது. கடந்த 5 வருடமாக ஆனந்த் அம்பானி குஜராத் ஜாம்நகரில் தங்கி திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்பிளக்ஸ் கட்டும் பணிகளைக் கவனித்து வருகிறார்.
இந்தத் திருமண அழைப்பிதழ் அட்டையில் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் கையால் எழுதப்பட்ட குறிப்பு உள்ளது, குஜராத்தின் ஜாம்நகருக்குப் பயணம் செய்வதன் மூலம் ஆனந்த் அம்பானியின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் எங்கள் குடும்பத்தின் ஆரம்ப வாழ்க்கையை இணைக்கிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருமண அழைப்பிதழ்-ல், Pre Weeding நிகழ்ச்சிகள் அனைத்தும் ஜாம்நகரில் அமைந்திருக்கும் ரிலையன்ஸ் கிரீன்ஸ்-ல் மார்ச் 1 -3 2024 நடக்க உள்ளது. 1997 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜாம்நகரில் மாபெரும் சுத்திகரிப்பு ஆலையைக் கட்டப்பட்டதில் இருந்து சுமார் 1 கோடிக்கும் அதிகமாக மரங்கள் நடப்பட்டு உள்ளது பசுமை பகுதியாக மாற்றியுள்ளோம். மேலும் ஜாம்நகரில் ஆசியாவின் மிகப்பெரிய மாம்பழ தோட்டம் அமைந்துள்ளது.


இந்தப் பகுதியில் தற்போது ஆனந்த் அம்பானி பல விலங்குகளைக் காப்பாற்றி வளர்த்து வருகிறான். கடந்த 25 வருடத்தில் எங்கள் குடும்பத்தின் முக்கியமான நினைவுகள் ஜாம்நகரில் உள்ளது, இயற்கை சூழ நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கிறோம் என முகேஷ் அம்பானி, நீதா அம்பானி கைகளால் எழுதியுள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications