இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சி நெருக்கமான குடும்பத்தினர் மட்டுமே கொண்டு லண்டனில் ஸ்டோக் பார்க்-ல் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் என தகவல் வெளியான நிலையில், அனைத்தும் பொய் என்ற வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி தனது இளைய மகனின் திருமணத்தைச் சொந்த ஊரில், சொந்த இடத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார். இதன் படி வருகிற ஜூலை 12ம் தேதி மும்பையில் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் நடக்க உள்ளது.

திருமணம் இடம்: ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் பாரம்பரிய இந்து வேத முறைப்படி நடைபெறவுள்ளது. மும்பையில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான பாந்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) பகுதியில் அமைந்துள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் திருமணத்திற்கான இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நிரல்: முக்கிய விழாக்கள் ஜூலை 12ம் தேதி சுப விவாக எனும் மங்களகரமான திருமண நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது. ஜூலை 13ம் தேதி சுப ஆசீர்வாத எனும் தெய்வீக ஆசீர்வாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜூலை 14ம் தேதி மாலை மங்கள உற்சவம் எனும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திருமண அழைப்பிதழ்: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தின் அழைப்பிதழ் படம், ANI எக்ஸ்-ல் பகிர்ந்துள்ளது. இதில் பெருமாள் நாமம் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது, மேலும் விருந்தினர்களை அம்பானி வீட்டுப் பிள்ளைகள், மருமகன், மருமகள், பேரப்பிள்ளைகள் என அனைவரும் அழைக்கும் விதமாக அவர்களின் பெயர் அச்சிடப்பட்டு உள்ளது.
டிரஸ் கோட்: ஜூலை 12ம் தேதி நடைபெறும் முக்கிய திருமண நிகழ்ச்சிக்கு விருந்தினர்கள் பாரம்பரிய இந்திய உடை (traditional Indian attire) அணிந்து வர வேண்டியது கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜூலை 13ம் தேதி நடைபெறும் சுப ஆசிர்வாத நிகழ்ச்சிக்கு இந்திய பார்மல் (Indian formal) உடை அணிய வேண்டும்.
ஜூலை 14ம் தேதி நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு "இந்திய சிக்" (Indian Chic) என்ற கருத்தை மையமாகக் கொண்ட உடை அணிந்து வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கிராண்ட் பிரி-வெட்டிங் கொண்டாட்டங்கள்: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முன்னதாக, இந்த வாரம் ஐரோப்பிய க்ரூஸ் கப்பலில் நான்கு நாள் பிரமாண்டமான இரண்டாவது ப்ரி-வெட்டிங் கொண்டாட்டங்களை முகேஷ் மற்றும் நீதா அம்பானி தம்பதியர் நடத்தி வருகின்றனர்.
சல்மான் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ். தோனி, ரன்வீர் சிங் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications