2023 ஜனவரியில் ஆனந்த் அம்பானி-க்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் வீடான அன்டிலியாவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் அம்பானி குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.
அதன் பின்பு குஜராத் ஜாம் நகரில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கிய காடுகள் மத்தியில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. ஒட்டுமொத்த பாலிவுட்-ம் ஓடி ஓடி வேலை செய்ததை யாராலும் மறக்க முடியாது.

இந்த நிலையில் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இடையே இந்த ஆண்டு ஜூலையில் திருமணம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் பிரபல தொழிலதிபர் விரென் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் அவர்களது திருமண நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்று லண்டனில் நடைபெறுவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இந்தத் தகவலை அம்பானி குடும்பத்தினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதற்காக பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அந்த தேதியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில் என்ன மாதிரியான நிகழ்ச்சி நடைபெறும் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஒருவேளை அது ஒரு மதுபான விருந்தாகவும் இசை இரவாகவும் இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஆனந்த் அம்பானியும் ராதிகா மெர்ச்சன்ட்டும் துபாயில் உள்ள 2 ஷாப்பிங் மால்களில் ஷாப்பிங் செய்ததை பார்க்க முடிந்தது. அப்போது அவர்கள் 20 கார்கள் கொண்ட கான்வாயில் பலத்த பாதுகாப்புடன் வந்திருந்தனர்.
இந்த ஆண்டு மார்ச் 1 முதல் 3 ஆம் தேதிவரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத்துக்கு முந்தைய வைபோக நிகழ்ச்சிகளை முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் வெகு சிறப்பாக நடத்தினர். மார்க் ஜுக்கர்பெர்க், பில்கேட்ஸ் போன்ற பெரிய தலைகளும் ஷாரூக் கான் உள்பட பாலிவுட் பிரபலங்களும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த மூன்று நாள் நிகழ்ச்சிகளில் ஒவ்வொன்றும் ஒரு தீமில் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் ஆனந்த் அம்பானியும் ராதிகா மெர்ச்சன்ட்டும் வெகு உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.
2022 டிசம்பரில் ராஜஸ்தானில் உள்ள நாத்துவாராவில் அமைந்துள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் இந்த ஜோடிக்கு இடையே உள்ள உறவு பற்றி உலகுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கும் ரோகா என்ற சடங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர்களது திருமணத்தை நோக்கிய வாழ்க்கை தொடங்கிவிட்டதாக ஐதீகமாகும்.
ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் நீண்ட காலமாக நட்பு இருந்து வந்தது. இத்துடன் ஆனந்த்தும் ராதிகாவும் அவர்களது பால்யகாலத்தில் இருந்தே பரஸ்பரம் அறிந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
2018 ஆம் ஆண்டில்தான் அவர்களுக்கு இடையே இருந்த நெருக்கம் வெளியே தெரிந்தது. இருவரும் ஒரேமாதிரியான ஆடை அணிந்து எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதால் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. அதற்குப் பின் அம்பானியின் குடும்ப நிகழ்ச்சிகளில் ராதிகா தொடர்ந்து தலைகாட்டி வந்தார்.
Story written by: I.jayachandran
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications