ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் பல வருடமாகக் காதலித்து வந்த நிலையில் ஈஷா அம்பானியின் திருமணத்திற்குப் பின்பு இருவரின் காதல் குறித்து வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.
சமீபத்தில் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-க்கு பல்வேறு முக்கியப் பதவிகள் கொடுக்கப்பட்டது மட்டும் அல்லாமல் வர்த்தகம், சொத்து ஆகியவற்றைப் பிரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவை எடுக்கும் முன்பே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் எதிர்காலம் ஆனந்த் அம்பானி கையில் கொடுக்கப்பட்டது.

ஆமாம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் எதிர்காலம் நியூ எனர்ஜி வர்த்தகத்தில் தான் உள்ளது, லித்தியம் பேட்டரி, சோலார் செல் தயாரிப்பதில் இருந்து கார்பன் ஃபைபர் தொழிற்சாலை வரை தற்போது குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் உருவாக்கி வரும் திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்பிளக்ஸ் அமைந்து வருகிறது.
ஆனந்த் அம்பானி தான் மொத்த கிரீன் எனர்ஜி வர்த்தகத்தையும் நிர்வாகம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் ரோகா விழா அதாவது நிச்சயதார்த்த விழா 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் இரு குடும்பத்தின் முன்னிலையில் நடந்தது.
அதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பையில் முகேஷ் அம்பானியின் அண்டிலியா வீட்டில் பிரம்மாண்டமாக அம்பானி குடும்ப வழக்கத்தின் படி நிச்சயதார்த்த விழா நடந்தது. இதன் பின்பு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின்பு 2024 மார்ச் மாதம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் திருமணம் நடக்க உள்ளது.

தற்போது இணையத்தில் வைரலான திருமண அழைப்பிதழின்படி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அதாவது Pre Weeding நிகழ்ச்சிகள் அனைத்தும் மார்ச் 1- 3, 2024 வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஜாம்நகர் தொழிற்சாலைக்குள் சுமார் 1 கோடிக்கும் அதிகமாக மரங்களை நட்டு பசுமை பகுதியாக மாற்றியுள்ளோம். மேலும் ஜாம்நகரில் ஆசியாவின் மிகப்பெரிய மாம்பழ தோட்டம் அமைந்துள்ளது. இதேவேளையில் ஆனந்த் அம்பானி பல விலங்குகளைக் காப்பாற்றி அங்கு வளர்த்து வருகிறார்.
இதன் மூலம் இவர்களது திருமணம் காடுகள், விலங்குகள் மத்தியில் Pre Weeding நிகழ்ச்சிகள் அனைத்தும் ஜாம்நகரில் அமைந்திருக்கும் ரிலையன்ஸ் கிரீன்ஸ்-ல் மார்ச் 1 -3 2024 நடக்க உள்ளது. திருமண அழைப்பிதழ்-ம் இந்தத் தீம்-ல் தான் உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications