இந்தியாவின் பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் தலைவருமான முகேஷ் அம்பானி-யின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு உலகமே வியக்கும் வண்ணம் திருமணம் செய்து வைக்கிறார். இந்தியாவில் நடந்த ஏன் உலகிலேயே காஸ்ட்லியான திருமணமாகக் கூட இது இருக்கலாம்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்து மொத்த குடும்பமும் திருமணத்திற்காகத் தயாராகி வருகிறது. அம்பானி குடும்பம் மொத்தமும் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த வகையில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் பாரம்பரியமான இந்து முறைப்படி அனைத்து முக்கியமான நிகழ்ச்சிகளையும், சடங்குகளையும் செய்ய முடிவு செய்து வீடு முதல் மண்டபம் வரையில் பிரம்மாண்ட அலங்காரங்களைச் செய்துள்ளது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள அவர்களது காஸ்ட்லியான அன்டாலியா வீட்டில் நடைபெற்ற பிரமாண்ட மாமெரு விழாவுடன் அதிகாரப்பூர்வமாக ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தின் சடங்குகள் தொடங்கியுள்ளது.
மாமெரு விழா என்பது குஜராத்தி திருமண பாரம்பரியத்தில், மணமகளின் தாய்மாமன் இனிப்புகள் மற்றும் நகைகள், சேலை போன்ற பரிசுப் பொருட்களுடன் மணமகளைச் சந்திக்கும் நிகழ்வாகும். இது தான் ஒரு திருமணத்தின் துவக்க விழாவாக உள்ளது.
இந்த விழாவிற்காக ஆன்டிலியா வீடு பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருப்பதை ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது மட்டும் அல்லாமல் இந்த வீடியோ தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. எப்படி ஆனந்த் - ராதிகாவின் ஃப்ரீ வெட்டிங் டிரெண்டிங் ஆனதோ அதேபோல் தற்போது திருமணம் குறித்த வீடியோ, போட்டக்களும் டிரெண்டிங் ஆக துவங்கியுள்ளது.
இந்த நிலையில் மாமெரு விழாவிற்காக அன்டாலியா வீடு சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் ஆரஞ்சு பூக்களால் பிரம்மாண்டமாக அலங்கரித்து, வீட்டின் வெளியே சில இசைக்கலைஞர்கள் நிற்கும் வீடியோவில் இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.
மாமெரு விழாவின் மற்றொரு வீடியோவில், ஆனந்த் மற்றும் ராதிகா ஆகியோர் மேடையில் நிற்கின்றனர், அப்போது ஏராளமான விருந்தினர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். இந்த விருந்தினர் கூட்டத்திற்கு மத்தியில் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications