ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண இரண்டாவது முன்வைபோகம் ஒரு சொகுசு படகில் உல்லாசமாக நடைபெற இருக்கிறது.
இந்த திருமண முன்வைபோக நிகழ்ச்சியில் உலகின் பிரபலங்கள் பலரும் பாலிவுட் நட்சத்திர பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். சொகுசு படகு பயணம் இத்தாலியில் இன்று தொடங்கி பிரான்ஸில் ஜூன் 1 ஆம் தேதி முடிகிறது.

திருமண முன்வைபோக அழைப்பிதழில் வாழ்க்கை ஒரு பயணம் என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரன்வீர் சிங், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும் அவரது மனைவியும், நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட் ஜோடி ஆகியோர் மும்பை விமான நிலையத்துக்கு வந்தனர். உலகம் முழுவதும் இருந்து 300 விஐபி விருந்தினர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
உல்லாச பயணப் படகு அட்டவணை-
மே 29 - பாலெரெம்க் படகில் ஏறுதல்
தீம்- வெலகம் லஞ்ச்
டிரஸ் கோடு- கிளாசிக் க்ரூஸ்
மே 29- ஆன் போர்டு அட் சீ
தீம் - ஸ்டாரி நைட்
டிரஸ் கோடு- வெஸ்டர்ன் ஃபார்மல்ஸ்
மே 30- ஆன் லேண்டு ரோம்
தீம்- ரோமன் ஹாலிடே
டிரஸ் கோடு- டூரிஸ்ட் சிக் அட்டயர்ஸ்
மே 30 - ஆன் போர்டு
தீம்- லா டோல்ஸ் ஃபார் நைன்டெ
டிரஸ் கோடு- ரெட்ரோ
மே 30 - டோகா பார்ட்டி
மே 31- ஆன் போர்டு
தீம் - வீ டர்ன்ஸ் ஒன் அண்டர் தி சன்
டிரஸ் கோடு- பிளேஃபுல்
மே 31- ஆன் லேண்டு கேன்ஸ்
தீம்- லே மாஸ்குரேடு
டிரஸ் கோடு- பிளாக் தி மாஸ்குரேடு
மே 31- ஆன் போர்டு
தீம்- பார்டன் மை பிரஞ்ச் (ஆஃப்டர் பார்ட்டி)
ஜூன் 1- ஆன் லேண்டு போர்ட்டோபினோ
தீம்- லா டோல்ஸ் வீட்டா
டிரஸ் கோடு- இத்தாலியன் சம்மர்
சொகுசு கப்பலில் கண்டிப்பாக போன்களுக்கு அனுமதி இல்லை. ஜோடிகளின் இனிய நினைவுகளை பாதுகாக்க இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
ஜூலை 12 ஆம் தேதியன்று ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக குஜராத்தின் ஜாம்நகரில் திருமண வைபோக நிகழ்ச்சிகளை மூன்று நாட்கள் நடத்தினர்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications