இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி வீட்டில் திருமண ஏற்பாடுகள் அதிரடியாக நடக்க துவங்கியுள்ளது. அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி பிப்ரவரி 16 அன்று குஜராத்தின் ஜாம்நகரில் 'லகான் லக்வானு' விழாவுடன் தொடங்கியது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனும், ரிலையன்ஸ் கிரீன் எனர்ஜி அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் டிசம்பர் 2022 இல் நிச்சயதார்த்தம் நடந்தது. ராஜஸ்தானின் நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் இந்த ஜோடியின் ரோகா அதாவது நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

இதன் பின்பு திருமண நாள் எப்போது என முகேஷ் அம்பானி குடும்பம் அறிவிக்காமலேயே இருந்த நிலையில், ரிலையன்ஸ் கிரீன் எனர்ஜி ஜிகா பேக்டரியை கட்டமைக்கும் பணியில் அனந்த் அம்பானி மிகவும் பிசியாக இருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் அம்பானி லீட்டின் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் ராதிகா மெர்ச்சன்ட் பங்கேற்றார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை, இந்த ஜோடி திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியான குஜராத் கலாச்சாரத்தின் படி லகான் லக்வானு விழாவுடன் இவர்களின் திருமண ஏற்பாடுகள் தொடங்கியது.

இந்த விழா ஜாம்நகரில் நடந்தது, அங்கு அம்பானிகளுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. விழாவிற்கு, பிரபல வடிவமைப்பாளர் அனாமிகா கன்னாவின் பச்டேல்-ப்ளூ லெஹங்காவை ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த புகைப்படம் தற்போது சமுகவலைத்தளத்தில் பிரபலமாகியுள்ளது.
அனாமிகா கன்னா டிசைனில் உருவான லெஹங்கா உடன் வைர நகைகளை அணிந்துள்ள இந்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அதாவது Pre Weeding நிகழ்ச்சிகள் அனைத்தும் மார்ச் 1, 2024 அன்று தொடங்கி மார்ச் 3, 2024 வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் அம்பானி குடும்பத்தின் கோட்டையான குஜராத் மாநில ஜாம்நகரில் நடக்க உள்ளது. இவர்களின் திருமண அழைப்பிதழ்-ல், Pre Weeding நிகழ்ச்சிகள் அனைத்தும் ஜாம்நகரில் அமைந்திருக்கும் ரிலையன்ஸ் கிரீன்ஸ்-ல் மரங்கள், விலங்குகளுக்கு மத்தியில் மார்ச் 1 -3 2024 நடக்க உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெச்சன்ட்டின் திருமண நிகழ்வில் விலங்குகளை பசுமை விலங்கியல், மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் (GZRRC) விலங்குகளை காட்சிப்படுத்தக் கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் உயிரியல் பூங்கா மற்றும் அறக்கட்டளைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

GZRRC என்பது குஜராத்தில் உள்ள ஜமாநகர் நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள மோதி காவ்டி கிராமத்தில் உள்ள அதன் எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மூலம் 280 ஏக்கரில் உருவாக்கப்பட்டு வரும் காடு மற்றும் விலங்கியல் மீட்டு காப்பகம்.
மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் போது விலங்குகளுக்கு ஏதேனும் காயம் அல்லது தவறான சிகிச்சை அளிக்கப்படலாம் என்ற அச்சத்தில் மட்டுமே தற்போதைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. அத்தகைய மனுவை வெறுமனே அச்சத்தை கருத்தில் கொள்ள முடியாது என்று மனுவை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் கிரிஷ் கத்பாலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விளக்கம் கொடுத்து மனுவை தள்ளுபடி செய்தது.


Click it and Unblock the Notifications