இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு இந்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெறக்கூடிய மிக ஆடம்பரமான திருமணமாக இது இருக்கப் போகிறது.
ஏற்கனவே இதுபோல பல கோடி செலவு திருமணம் செய்து கொண்ட பிரபலங்களின் பட்டியலை ஒரு ரவுண்ட் பார்க்கலாம் வாங்க.

ஈஷா அம்பானி: முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கும் தொழிலதிபரின் மகன் ஆனந்த் பிராமலுக்கும் 2018ஆம் ஆண்டு பிரம்மாண்டாமான முறையில் திருமணம் நடத்தப்பட்டது. இதற்காக 700 கோடி ரூபாயை இவர்கள் செலவு செய்தனர்.
ஒரு வார காலமாக இந்த திருமண கொண்டாட்டங்கள் அரங்கேறின. உதய்பூர், இத்தாலியின் கோமா ஏரி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் உலகெங்கிலும் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சஹாரா குடும்ப திருமணம்: சஹாரா குழுமத்தின் முன்னாள் தலைவரான சுப்ரதா ராயின் மகன்கள் சுஷாந்த் ராய் மற்றும் சீமான்டோ ராய் ஆகியோருக்கு 2004 ஆம் ஆண்டு திருமணம் நடத்தப்பட்டது. இதற்காக சஹாரா குடும்பத்தினர் 554 கோடி செலவு செய்துள்ளனர்.
லக்னோவின் சஹாரா மைதானத்தில் ஒரு வார காலத்திற்கு இந்த திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றன. 11 ஆயிரம் விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர். பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து பல்வேறு பிரமுகர்களும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ரெட்டி குடும்ப திருமணம்: முன்னாள் அரசியல்வாதியும் சுரங்க துறையில் புகழ்பெற்ற தொழிலதிபருமான கலீ ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணி ரெட்டிக்கும் ராஜீவ் ரெட்டி என்பவருக்கும் 2016 ஆம் ஆண்டில் ஆடம்பரமான முறையில் திருமணம் நடத்தப்பட்டது.
ஐந்து நாட்கள் பெங்களூரு மாளிகையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து அரசியல்வாதிகளும் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்வுக்காக இந்த குடும்பம் 500 கோடி செலவு செய்தது.
மிட்டல் குடும்பம்: பிரமோத் மிட்டலின் மகள் ஷிருஸ்டி மிட்டலுக்கும், குல்ராஜ் பெல் என்பவருக்கும் ஆடம்பரமான முறையில் திருமணம் நடத்தப்பட்டது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த திருமண நிகழ்வுக்கு இந்த குடும்பம் 500 கோடி செலவு செய்தது.
இந்த திருமண நிகழ்வில் 60 கிலோ எடையில் ஆறு அடுக்குகள் கொண்ட கேக் வெட்டப்பட்டது. இந்த திருமண நிகழ்வுகளை படம்பிடிப்பதற்காக புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டன.
லட்சுமி மிட்டல்: லட்சுமி மிட்டலின் மகள் வனிஷாவுக்கும் லண்டனை சேர்ந்த வங்கி அதிபரான அமித் பாத்திஹாவிற்கும் பாரிஸில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஆறு நாட்களுக்கு நடைபெற்ற இந்த திருமண நிகழ்வுகளுக்காக லட்சுமி மிட்டல் 240 கோடி ரூபாயை செலவு செய்தார்.
ஸ்டாலியன் குழுமம்: ஸ்டாலியன் குழுமத்தின் நிறுவனர் சுனில் வஸ்வாணியின் மகள் சோனம் வஸ்வானிக்கும் தொழிலதிபர் நவீன் ஃபாபியாணிக்கும் 2017 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியான்னா நகரில் திருமணம் நடத்தப்பட்டது. இதற்காக இந்த குடும்பம் 210 கோடி செலவு செய்தது.
விராட்- அனுஷ்கா: பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ஆகியோருக்கு 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் ஆடம்பரமான முறையில் திருமணம் நடத்தப்பட்டது. இந்த திருமணத்திற்காக இவ்விருவரும் 100 கோடி ரூபாயை செலவு செய்ததாக தெரிகிறது. இத்தாலியில் திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சியை இவர்கள் நடத்தினர். பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சனா கான்: துபாய் தொழிலதிபரான அடெல் சஜானுக்கும் நடிகை சனா கானுக்கும் சொகுசு கப்பலில் திருமணம் நடத்தப்பட்டது. ஸ்பெயினில் இருந்து பிரான்ஸ் வழியாக இத்தாலிக்கு சென்ற இந்த சொகுசு கப்பலில் திருமணம் நடத்துவதற்காக இவர்கள் 100 கோடி ரூபாயை செலவு செய்துள்ளனர். இந்த திருமண நிகழ்வில் 10 அடுக்கு கொண்ட கேக் வெட்டப்பட்டது.
ரன்வீர்-தீபிகா: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கும் நடிகை தீபிகா படுகோனுக்கும் 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் கேமோ ஏரியில் திருமணம் நடத்தப்பட்டது. இதனை அடுத்து பெங்களூரு மற்றும் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த கொண்டாட்டங்களுக்காக 77 கோடி ரூபாயை செலவு செய்துள்ளனர்.
முகேஷ் அம்பானி மூத்த மகன்: இந்த பட்டியலில் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும் இடம் இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு ஆகாஷ் அம்பானிக்கும் ஸ்லோகா மேத்தாவுக்கும் மிகப்பிரமாண்டமான முறையில் ஜியோ வேர்ல்ட் கன்வென்சன் சென்டரில் திருமணம் நடத்தப்பட்டது. பல கோடி ரூபாய் இந்த திருமணத்திற்கு செலவாகி இருக்கும். ஆனால் அம்பானி குடும்பத்தினர் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரங்களை வெளியிடவில்லை.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications