மகாராஷ்ட்ரா : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு இந்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. பிரபல தொழிலதிபர் வீரன் மெர்சண்டின் மகள் ராதிகா மெர்சண்டை ஆனந்த் திருமணம் செய்ய இருக்கிறார். திருமண ஏற்பாடுகளில் அம்பானி குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திரையுலக பிரபலங்கள் மற்றும் பிற துறை சார்ந்த பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு ஆனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழை அனுப்பி வருகின்றனர். ஆனந்த் மற்றும் ராதிகாவிற்கு ஜூலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் திருமணம் நடைபெற இருக்கிறது. 13ஆம் தேதி சுப ஆசிர்வாத நிகவும், 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக ஆனந்தின் திருமணத்திற்காக தயாராகி வருகின்றனர். திருமண அழைப்பிதழ்களை அனுப்புவது மட்டுமில்லாமல் நாட்டின் முக்கிய கோயில்களுக்கு எல்லாம் சென்று இவர்கள் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மணமகனான ஆனந்த் அம்பானி மகாராஷ்டிரா மாநிலம் நேரல் பகுதியில் இருக்கக்கூடிய கிருஷ்ணா காளி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
ஆனந்த் அம்பானிக்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆனந்த், என்னுடைய திருமணத்திற்கு கடவுளின் ஆசிர்வாதத்தை பெறுவதற்காக நான் இங்கு வருகை தந்திருக்கிறேன் என கூறினார். இந்த கோயிலுக்கு வருகை தந்திருந்த போது ஆனந்த அம்பானி அணிந்திருந்த சிவப்பு நிற கைக்கடிகாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனந்த் எப்போதுமே தன்னுடைய தனித்துவமான கைக்கடிகாரங்களுக்கு பெயர் போனவர்.
ஆனந்தின் இந்த சிவப்பு நிற கார்பன் கடிகாரம், ரிச்சர்ட் மிலே ஆர்எம் 12-01 டூர்பில்லியன்(Richard Mille RM 12-01 Tourbillon) என்ற ஒரு பிரத்தியேக கை கடிகாரமாகும். சர்வதேச அளவில் இந்த வகையில் மொத்தம் 18 கைக்கடிகாரங்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்று ஆனந்த் அம்பானி வைத்திருக்கிறார்.
இந்த ஆர்.எம். 12-01 வகை கை கடிகாரங்கள் என்பது நான்கு வித்தியாசமான வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த கைக்கடிகாரத்தின் சிறப்பே இது கார்பனால் தயாரிக்கப்பட்டது என்பது தான். இதன் விலை 6 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வருகை தந்த பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் ஆனந்தின் கைக்கடிகாரத்தை வியப்புடன் பார்க்கும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.
story written by: Devika


Click it and Unblock the Notifications