மும்பை: இந்தியாவில் தேர்தல் முடிவுகளுக்கு அடுத்தபடியாக அதிக கவனம் பெற்றுள்ள ஒரு நிகழ்வு முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணம்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்செண்ட் ஆகிய இருவருக்கும் வரும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முன்னதாக இரண்டு கொண்டாட்டங்கள் நடந்து முடிந்து விட்டன. முதல் கொண்டாட்டம் கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது. இரண்டாவது கொண்டாட்டம் கடந்த மே 29ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஐரோப்பாவில் நடைபெற்றது.

சொகுசு கப்பலில் தொடங்கிய இந்த கொண்டாட்டம் மூன்று நாட்களுக்கு நீடித்தது. பின்னர் பிரான்சில் வந்து திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் முடிவடைந்தன.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனிடையே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டுக்கு வரும் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற இருக்கிறது.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் (Jio World Convention Centre) தான் திருமணம் நடைபெற இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே பல்வேறு விருந்தினர்களுக்கும் திருமண பத்திரிகைகள் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமூக வலைத்தளங்களில் கூட இவர்களது திருமண பத்திரிகைகளில் ஒன்று அண்மையில் லீக்கானது. ஜூலை 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடைபெற இருக்கிறது. இந்திய பாரம்பரிய முறைப்படி அனைவரும் உடை அணிந்து வர வேண்டும் என அதில் டிரஸ் கோடாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணம் ஜூலை 12ஆம் தேதியும் ஆசீர்வதிக்கப்படும் சுபாஷீர்வாதம் என்ற நிகழ்வு ஜூலை 13ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதனை அடுத்து ஜூலை 14ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் தான் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது ஆனந்திற்கும் அங்கு தான் திருமணம் நடைபெற இருக்கிறது. மூன்று நாட்களுக்கு இந்த திருமண கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
ஜியோ வேர்ல்ட் சென்டரை பொறுத்தவரை முகேஷ் அம்பானிக்கு சொந்தமான இந்த மையம் 18.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குறிப்பாக ரூஃப் டாப் திரையரங்கு, ஹோட்டல்கள், மால்கள் மற்றும் வணிக ரீதியான அலுவலகங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட இடம் தான் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர்.
இங்குள்ள ஜியோ வேர்ல்ட் கார்டனில் தான் திருமண நிகழ்வுகள் அரங்கேற உள்ளன. திறந்த வெளி மைதானமான இங்கு ஆயிரக்கணக்கான விருந்தினர்களை வரவேற்க இயலும்.
5,000 கார்களை நிறுத்தக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய கார் நிறுத்தும் இடத்தைக் கொண்டுள்ளது. இங்கே ஏற்கனவே பல்வேறு புகழ்பெற்ற சர்வதேச நிகழ்ச்சிகள் அரங்கேறி உள்ளன. ஒரு நாளைக்கு இங்கே நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வரிகள் நீங்கலாக 15 லட்சம் ரூபாய் வாடகையாக செலுத்தப்பட வேண்டும்.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications