அனந்த் அம்பானி சமீபத்தில் மிகவும் அரிதான மற்றும் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்திருந்த வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி அம்பானி குடும்பத்தின் ஆடம்பர வாழ்க்கை மீண்டும் பேசு பொருளானது. அம்பானி குடும்பம் காலையில் எழுந்து குடிக்கும் டீ கப் முதல் இரவில் சாப்பிடும் உணவை சமைக்கும் செஃப் வரையில் அனைத்தும் காஸ்ட்லி தான்.

அப்படி அனந்த் அம்பானி கட்டியிருந்த வாட்ச் விலை 18 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடையது என கணிக்கப்பட்டு உள்ளது. 150 ரூபாய் வாட்ச்சில் காட்டும் அதே நேரத்தை தானே இந்த வாட்சு காட்டப்போகு இப்புறம் எதுக்கு 18 கோடி ரூபாய் என கேட்பவர்களுக்கு இந்த வாட்ச்-ல் என்ன ஸ்பெஷல்..? ஏன் இதன் விலை அதிகமாக உள்ளது..? ஆகியவற்றுக்கான பதிலும் இதில் உள்ளது.
வாட்ச் என்பது இன்று மக்கள் வாழ்க்கை நடைமுறையில் ஒரு லைப்ஸ்டைல் பொருளாகவும், எளிதாக கிடைக்க கூடிய மலிவான பொருளாகவும் உள்ளது. ஆனால் இன்றும் உலகில் பல நாடுகளில் வாட்ச் வாங்குவது என்பது ஒரு வளர்ச்சியின் அங்கிகாரமாகவே பார்க்கப்படுகிறது. இதனாலேயே வாட்ச் கிஃப்ட் ஆக கொடுக்கப்படும் தருணங்கள் அனைத்தும் முக்கியமானதாகவே இருக்கும்.

முதலில் ஒரு வாட்ச் விலை கோடிக்கணக்கில் உயர முக்கிய காரணம், அந்த வாட்சை தயாரித்த பிராண்ட். ஒரு நிறுவனத்தின பிராண்ட் மதிப்பு பல வகையில் உயரும், சப்ளை - டிமாண்ட், அதன் விலை, வாடிக்கையாளர்கள், தரம், டிசைன், தனித்துவம் இப்படி பல விஷயங்கள் அடங்கும்.
அப்படி ஆடம்பர பிராண்டுக்கான அனைத்து செக் பாக்ஸ்-களையும் டிக் அடித்த ஒரு நிறுவனம் தான் வாட்ச் தயாரிக்கும் படேக் பிலிப், இந்த நிறுவனம் தயாரித்த கிராண்ட்மாஸ்டர் சைம் (Grandmaster Chime) என்ற வாட்ச்-ஐ அனந்த் அம்பானி கட்டியிருந்தார். இந்த வாட்ச் பிரத்தியேகமான முறையில் வெகு சிறு எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டது.
உண்மையில், அனந்த் அம்பானி கட்டியிருந்த 18 கோடி ரூபாய் வாட்ச் பற்றிய செய்தி வெளியான உடன் படேக் பிலிப் பிராண்டின் இந்த கடிகாரம் தான் உலகின் மிக விலை உயர்ந்த கடிகாரம் என்ற கருத்து நிலவியது. ஆனால் உண்மை வேறு.

படேக் பிலிப் கிராண்ட்மாஸ்டர் சைம் நிச்சயமாக உலகின் மிக விலையுயர்ந்த கடிகாரங்களின் பட்டியலில் உள்ளது, ஆனால் உண்மையில் அந்த அங்கிகாரத்தை வைத்திருக்கும் ஒரு கடிகாரம் கிராஃப் டயமண்ட்ஸ் ஹாலுசினேஷன் (Graff Diamonds Hallucination) என்ற வாட்ச் தான். இதன் விலை சுமார் 458 கோடி ரூபாய்.


Click it and Unblock the Notifications