அம்பானி வீட்டில் அடுத்தடுத்து குவா குவா சத்தம் கேட்டு வரும் நிலையில், விரைவில் கெட்டிமேளம் சத்தம் கேட்கபோகிறது. முகேஷ் அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் ரோகா கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தான கோவிலில் நடந்ததது.
இதை தொடர்ந்து ஜனவரி மாதம் மும்பையில் முகேஷ் அம்பானி-யின் அண்டிலியா வீட்டில் குஜராத் கலாச்சாரத்தின் படி மிகவும் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்த விழா நடந்தது. இந்த நிலையில் விரைவில் அம்பானி குடும்பம் இவர்களின் திருமண தேதியை அறிவிக்க உள்ளனர்.

இது ஒருப்பக்கம் இருக்க முகேஷ் அம்பானி கடந்த வருடமே 3 பிள்ளைகளுக்கும் 3 வர்த்தக பிரிவை தனித்தனியாக பிரித்துகொடுத்துள்ளார். இதில் மூத்த மகனான ஆகாஷ் அம்பானிக்கு ஜியோ டெலிகாம், ஈஷா அம்பானிக்கு ரிலையன்ஸ் ரீடைல், கடைக்குட்டி சிங்கம் அனந்த் அம்பானி-க்கு நியூ எனர்ஜி என பிரித்துக்கொடுக்கப்பட்டு உள்ளது.
முகேஷ் அம்பானி, அனந்த் அம்பானி நிர்வாகம் செய்யும் நியூ எனர்ஜி வர்த்தகத்தில் சுமார் 75000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்வதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது 12000 கோடி ரூபாய் முதலீடு செய்து நியூ எனர்ஜி வர்த்தகத்திற்கான நிறுவனங்களை கையகப்படுத்தியும், கூட்டணியும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு முழுவதும் அனந்த் அம்பானி நியூ எனர்ஜி வர்த்தகத்திற்கான தொழிற்சாலை கட்டுமானம், உற்பத்தி தளம், தேவையான சப்ளை செயின் அமைக்கவேண்டும் என்பதற்காக குஜராத்திலேயே தான் இருந்தார். இந்த நிலையில் நியூஎனர்ஜி வர்த்தகத்தின் மதிப்பு என்ன..? இதன் மூலம் ரிலையன்ஸ்-க்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது
செக்யூரிட்டீஸ் நிறுவனமான ஸ்டான்போர்டு சி பெர்ன்ஸ்டீன் நிறுவனம் வெளியிட்ட ஆய்வின் படி அடுத்த 7 வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்திற்கு நியூ எனர்ஜி வர்த்தகத்திற்கு மட்டும் சுமார் 10 முதல் 15 பில்லியன் டாலர் வருமானத்தை அளிக்க போகிறது. இந்திய ரூபாய் மதிப்பின் படி 1,20,000 கோடி ரூபாய். இதுதான் அனந்த் அம்பானி தனது தந்தை முகேஷ் அம்பானிக்கு கொடுக்கப்போகும் கிப்ட்.
இதுமட்டும் அல்லாமல் 2030க்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சுமார் 60 சதவீதம் சோலார் மார்கெட், 30 சதவீதம் பேட்டரி மார்கெட், 20 சதவீதம் ஹைட்ரஜென் எனர்ஜி மார்கெட்-ஐ பிடிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் free cash flow 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு தற்போது இருக்கும் முக்கியமான பிரச்சனை இத்துறையில் வர்த்தகத்திற்கு தேவையான தொழில்நுட்பமும், உற்பத்தி தளமும் இல்லை. இதனால் அடிப்படையில் இருந்து அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, இதற்கு அதிகப்படியான முதலீடும் தேவைப்படுகிறது.


Click it and Unblock the Notifications