மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியும், தொழிலதிபர் விரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டும் ஜூலை 12 ஆம் தேதி நடந்த பிரமாண்ட விழாவில் திருமணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் சினிமா சூப்பர் ஸ்டார்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், ஆன்மீகத் தலைவர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து இந்த திருமணத்தின் ஒரு பகுதியாக 13 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நாட்டின் ஆன்மீக மற்றும் சமயத் தலைவர்களை முகேஷ் அம்மாணியும் நீதா அம்பானியும் அழைத்து சுப ஆசீர்வாதம் நிகழ்ச்சியை நடத்தினர்.

ஜியோ வோர்ல்டு சென்டரில், ஆனந்த் - ராதிகாவுக்கு சுப ஆசீர்வாதம் என்ற நிகழ்ச்சியை அம்பானி குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியில், துறவிகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளான ஆனந்த் - ராதிகா ஆகியோரை ஆசீர்வாதம் செய்தனர்.
நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர், ஆனந்த்-ராதிகா சுப ஆசீர்வாதம் விழாவில் கலந்து கொள்ள வந்த துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதி மற்றும் ஜோதிர்மத் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் ஆகியோரை நேரில் வரவேற்றனர்.
இந்த விழாவில் கலந்துகொள்ள சுவாமி சதானந்த சரஸ்வதி, சங்கராச்சாரியார் - துவாரகா; சுவாமி அவிமுக்தேஷ்வரந்த் சரஸ்வதி - சங்கராச்சார்யா ஜோஷிமத்; இஸ்கான் கோட்ட இயக்குனர் கவுரங் தாஸ் பிரபு; கவுர் கோபால் தாஸ், ராதாநாத் சுவாமி இஸ்கான் ஆளும் குழு உறுப்பினர்; பூஜ்யஸ்ரீ ரமேஷ்பாய் ஓசா, கௌதம்பாய் ஓசா, பூஜ்யஸ்ரீ தேவபிரசாத் மகராஜ், விஜுபென் ரஜனி, ஸ்ரீ ஆனந்தபாவா சேவா சன்ஸ்தா, ஸ்ரீ பாலக் யோகேஷ்வர்தாஸ் ஜி மகராஜ், பத்ரிநாத் தாம், பூஜ்யஸ்ரீ சிதானந்த சரஸ்வதி, தலைவர், பரமார்த் நிகேதன் ஆசிரமம், முஹராஜ் நிகேதன் ஆசிரமத்தின் தலைவர் திரேந்திர சாஸ்திரி மற்றும் பாகேஷ்வர் தாம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இவர்களுடன் யோகா குரு பாபா ராம்தேவும் கலந்து கொண்டார். ஸ்வாமி ராமபத்ராச்சார்யா, ஸ்வாமி கைலாசானந்த், மஹாமண்டலேஷ்வர், நிரஞ்சனி அகாரா, அவதேசானந்த் கிரி, மகாமண்டலேஷ்வர், ஜூனா அகாரா, ஸ்ரீ தேவ்கினந்தன் தாகுர்ஜி மகராஜ், விஸ்வ சாந்தி சேவா டிரஸ்ட், திதி மா சாத்வி ரிதம்பர ஜி, வத்சல்ய கிராம் மற்றும் ஸ்ரீ விஷால் ராகேஷ், ஸ்ரீ விஷால் ராகேஷ் கோயில் என பல முக்கிய கோவில்களின் துறவிகள், தலைமை பூசாரிகள் ஆனந்த்-ராதிகா-வை ஆசீர்வதிக்க வந்தனர்,


Click it and Unblock the Notifications