இந்தியாவின் பெரும் பணக்காரர் மற்றும் முன்னணி தொழிலதிபரான குமார் மங்களம் பிர்லாவின் மகள் அனன்யா பிர்லா தலைமை விகிக்கும் ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பிளிப்கார்ட் சச்சின் பன்சால் ஈகாமர்ஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்பு துவங்கிய நவி (NAVI) குழுமத்தின் கிளை நிறுவனமான சைதன்யா இந்தியா ஃபின் கிரெடிட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை வாங்குகிறது.
ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சச்சின் பன்சாலின் சைதன்யா இந்தியா ஃபின் கிரெடிட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை ரூ.1,479 கோடிக்கு வாங்கவுள்ளது. இந்த ஒப்பந்தம் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த கைப்பற்றல் முடிவில் ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின் பிரைவேட் லிமிடெட் இந்தியாவின் இரண்டாவது பெரிய மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனமாக மாற்றும். இந்த கைப்பற்றலுக்கு பின்பு ஸ்வதந்த்ரா இந்தியாவில் 20 மாநிலங்களில் 1,517 கிளைகள் கொண்டு, 3.6 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு இருக்கும்.
இதோடு மார்ச் 31, 2023 நிலவரப்படி கணக்கிடும் போது அனன்யா பிர்லா தலைமை விகிக்கும் ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின் நிறுவனம் 12,409 கோடி ரூபாய் அளவிலான ஒருங்கிணைந்த சொத்துக்களை நிர்வாகம் செய்யும் அளவுக்கு உயர உள்ளது.

சைதன்யா இந்தியா ஃபின் கிரெடிட் நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் மைக்ரோபின் பிரிவில் முக்கிய இடத்திற்கு ஸ்வதந்த்ரா உயரும் என அனன்யா பிர்லா தெரிவித்துள்ளார். இதேபோல் சைதன்யா இந்தியா ஃபின் கிரெடிட் நிறுவனத்தை விற்பது மூலம் சச்சின் பன்சால் துவங்கிய நவி (NAVI) தனது இலக்கை அடையும் வகையில் டிஜிட்டல் வர்த்தகத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளார் சச்சின் பன்சால்.
சச்சின் பன்சாலின் சைதன்யா கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், ஒடிசா மற்றும் ஹரியானா ஆகிய 12 மாநிலங்களில் செயல்படுகிறது.


Click it and Unblock the Notifications