இன்றெல்லாம் பலரும் நிறுவனங்களுக்கு சென்று வேலை செய்வதை விரும்புவதில்லை. சுயமாக தொழில் தொடங்கி அதில் முன்னேற வேண்டும் என்று தான் எண்ணுகின்றனர். அப்படி பலரும் நிறுவன வேலைகளை விட்டுவிட்டு தற்போது கை நிறைய சம்பாதிப்பதாக பல பதிவுகளில் பார்த்தோம். அப்படித்தான் ஆந்திராவை சேர்ந்த ஒருவரும் லட்சங்களில் சம்பாதித்து வருகிறார். அப்படி அவர் என்ன செய்கிறார்? எப்படி இவ்வளவு வருமானம் கிடைக்கிறது? என்பது குறித்து பார்ப்போம்.
ஜெயசந்த் தோட்டா என்ற நபர் சிறுவயதிலிருந்தே தனது தந்தையின் கஷ்டங்களைப் பார்த்தே வளர்ந்தவர். இவருடைய தந்தை டிரான்ஸ்போர்ட் தொழிலில் இருந்தார். இந்த தொழிலில் தனது தந்தை எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து ஜெயசந்துக்கு நன்றாக தெரியும். இதனால் ஜெயசந்த் தனது தந்தையைப் பின்பற்ற விரும்பவில்லை. ஆனால் சுய தொழில் செய்ய வேண்டும் என்று மட்டும் எண்ணியுள்ளார்.

ஆனால் அதிக முதலீடு இருக்கக் கூடாது மற்றும் அதிக போக்குவரத்து செலவுகள் இருக்கக் கூடாது என்றும் யோசித்துள்ளார். அப்படி ஜெயச்சந்த் கண்டுபிடித்தது தான் காளான் வளர்ப்பு. இது ஒரு குறைந்த முதலீட்டு தொழிலாகும். எனவே இதுதான் அவருடைய முதல் தேர்வாக இருந்தது.
ஆந்திராவில் உள்ள லயோலா கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு பெங்களூருவில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சியை ஜெயச்சந்த் பெற்றார். அப்போதுதான் பால் காளான்களை வளர்க்க திட்டமிட்டார். பால் காளான்களை வளர்ப்பதற்கு 30 முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும்.
பட்டன் காளான்களுக்கு குளிர்ந்த காலநிலை தேவை. ஆனால் பால் காளான்களுக்கு அப்படி கிடையாது. வெப்பமண்டல பகுதிகளிலும் பயிரிடலாம். 28 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையை தாங்கக்கூடிய சக்தி கொண்டது.
இதைத் தெரிந்து கொண்ட ஜெயசந்த் 2005-ஆம் ஆண்டில் பால் காளான் விதைகளை வாங்கினார். பாலித்தீன் பைகள், நெல் வைக்கோல் போன்றவற்றையும் வாங்குவதற்காக 2000 ரூபாய் முதலீடு செய்தார். முதன் முதலாக கிலோ ஒன்று ரூ. 80 என்ற விலையில் 5 கிலோ பால் காளான் விதைகளை வாங்கினார். 40 பைகளில் பால் காளான் விதைகளை போட்டு பத்துக்கு பத்து அறையில் வைத்தார்.
அனுபவம் இல்லாததால் முதல்முறையாக அவர் வளர்த்த காளான்களை சந்தையில் விற்க முடியவில்லை. இரண்டாவது முறையும் காளான் வளர்ப்பில் ஜெயச்சந்த் தோல்வியுற்றார். எனவே விஜயவாடாவில் அவருடைய உறவினர் ஒருவர் காளான் வளர்ப்பில் ஈடுபடுகிறார் என்பதை தெரிந்து அவரிடம் பயிற்சி பெறச் சென்றார். அப்போதுதான் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அறுவடை செய்வது முதல் சந்தையில் விற்பனை செய்வது வரை அனைத்தையும் கற்றுக்கொண்டு 2 ஆண்டுகளுக்கு மேலாக காளான் வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கினார். அதன் பிறகு 2007-ஆம் ஆண்டில் "தனுஸ்ரீ காளான்கள்" என்ற தனது சொந்த வணிகத்தை நிறுவினார்.
ஜெயச்சந்த் தனது வீட்டின் அருகில் ஒரு சிறிய கொட்டகையை அமைத்து 50 கிலோ பால் காளான் விதைகளை வாங்கி அவற்றை ஊற வைப்பதற்காக நெல் வைக்கோலையும் வாங்கினார். நெல் வைக்கோலை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பிறகு விதைகளை சேர்த்து வைக்க வேண்டும்.
பட்டன் காளான்களை விட பால் காளான்களை வளர்க்கக் குறைந்த முதலீடே தேவைப்படுகிறது. 21 நாட்களுக்குப் பிறகு காளான்கள் வளரத் தொடங்கும். அதிலிருந்து 10 நாட்களுக்குள் மொத்தமாக வளரும். இதன் மூலம் மொத்தம் 31 நாட்களில் முதல் முறை அறுவடை செய்ய காளான்கள் தயாராகிவிடும். அடுத்த 30 நாட்களில் மீண்டும் அறுவடை செய்யலாம்.
பால் காளான் விதைகளை வாங்குவதற்கு 1000 கிலோமீட்டர் ஜெயச்சந்திரன் பயணிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு மாதமும் 1000 கிலோமீட்டர் பயணிப்பது நேரத்தை வீணடிப்பதாக உணர்ந்த ஜெயச்சந்த் தனது காளான் வளர்ப்பு இடத்திலேயே விதைகளையும் தயாரிக்கத் தொடங்கினார்.
இப்படியே விதை தயாரிப்பிலும் ஈடுபட்டு ஒரு நாளைக்கு 70 கிலோ முதல் 100 கிலோ பால் காளான்களை அறுவடை செய்ய தொடங்கினார். ஒரு கிலோ ஒன்றை 250 முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்ய தொடங்கினார்.
இதன் மூலம் ஜெயச்சந்திரன் தினசரி வருமானம் 25,000 ரூபாயை எட்டியது. சில நேரங்களில் ஜெயச்சந்துக்கு மாத வருமானமாக 7.5 லட்சம் வரையிலும் கிடைத்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் அவருடைய பண்ணைக்கே நேரடியாக வந்து காளான்களை வாங்கிக் கொள்கின்றனர். டிரக் மூலமாக பெரிய அளவிலான ஆர்டர்களை ஜெயச்சந்த் அனுப்பி வைக்கிறார். அதோடு பல்வேறு நபர்களுக்கும் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சியை வழங்கி வருகிறார். ஜெயச்சந்த் இந்தியா, துபாய் ,தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மக்களுக்கு காளான் பண்ணைகளை அமைக்க உதவியுள்ளார்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications