விசாகப்பட்டினம்: ஆந்திர மாநில அரசு 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மதுபான விற்பனை மற்றும் தனியாருக்கு உரிமங்களை வழங்குவதன் மூலம் மட்டும் 20,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு மதுபான கடைகள் மீண்டும் தனியாருக்கே டென்டர்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 3396 மதுபான கடைகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு அதன் மூலம் மட்டும் அரசுக்கு 1800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் மதுபான விற்பனையில் பெரும் ஊழல் நடைபெற்றதாக சந்திரபாபு நாயுடு அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தது.
ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது அவரது ஆட்களே மதுபான ஆலைகளை அமைத்து அதில் மலிவான மதுபானங்களை தயாரித்து அவற்றை அதிக விலைக்கு அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே சந்திரபாபு நாயுடு அரசு ஆந்திராவில் மீண்டும் பழைய நடைமுறைப்படி தனியார் மதுக் கடைகளுக்கு டெண்டர் விடுவது என அறிவித்தது.
இதில் கள் இறக்கும் பூர்வகுடிகளுக்கு 10% உரிமம் வழங்குவது எனவும் அரசு அறிவித்தது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் மொத்தம் 3396 மதுபான கடைகளுக்கு விண்ணப்ப கட்டணம் மூலமாக மட்டுமே அரசுக்கு 1800 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . சுமார் 90,000 பேர் இதற்காக விண்ணப்பம் செய்துள்ளார்களாம். கடைசி நாளில் மட்டும் 24,014 விண்ணப்பங்கள் போடப்பட்டுள்ளன.
இதன்படி பார்க்கும்போது ஒரு கடைக்கு சராசரியாக 26 பேர் விண்ணப்பம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. லாட்டரி அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படும் என ஆந்திர மாநில அரசு தெரிவிக்கிறது. இவ்வாறு உரிமம் பெறக்கூடிய நபர்கள் ஆறு தவணைகளில் கடைக்கான உரிமம் பெற்றதற்கான கட்டணமாக 50 லட்சம் ரூபாய் முதல் 85 லட்சம் ரூபாய் வரை செலுத்த உள்ளனர்.
கடந்த ஆண்டு ஆந்திர மாநில அரசு மதுபான விற்பனை மூலம் 30,000 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியது. இந்த நிலையில் அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 17,000 கோடி வருமானம் ஈட்ட முடியும் என ஆந்திர மாநில அரசு தெரிவிக்கிறது. ஆந்திராவின் வருவாய் துறைக்கான தலைமை செயலாளர் முகேஷ் குமார் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசு இதுவரை 90,000 விண்ணப்பங்களை பெற்றிருப்பதாகவும் இந்த விண்ணப்ப கட்டண தொகையாக ஒரு விண்ணப்பிப்பதற்கு 2 லட்சம் ரூபாய் என மொத்தம் 1800 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உரிமங்கள் வழங்கப்படும் பட்சத்தில் உரிமம் பெற்ற கடைகளிடம் இருந்து மொத்தமாக 2084 கோடி ரூபாய் அரசு வசூலிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த கட்டணமானது ரொக்கம்மாகவும், டிஜிட்டல் பரிமாற்றங்கள் முறையிலும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி 180ml மதுபாட்டில் 99 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications