ஆந்திரா: ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு 50 கிலோமீட்டர் தொலைவுக்கும் ஒரு மீன் பிடி துறைமுகம் அல்லது துறைமுகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு கடந்த ஆண்டு பதவி ஏற்றார். இதனை அடுத்து அந்த மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவருடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் ஆந்திராவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அமைச்சர்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

தொழில் தொடங்க ஏதுவாக பல்வேறு சலுகைகளையும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு துறைமுகம் சார்ந்த துறையை மேம்படுத்தும் நோக்கில் தங்கள் மாநிலத்தில் ஒவ்வொரு 50 கிலோமீட்டர் தொலைவிலும் ஒரு துறைமுகம் அல்லது மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டர் நீளம் கடற்கரை கொண்ட ஒரு மாநிலமாக ஆந்திரா இருக்கிறது. இதனை பயன்படுத்தி மாநிலத்தின் பொருளாதரத்தை மேம்படுத்த சந்திரபாபு நாயுடு தலைமை அரசு முடிவு செய்திருக்கிறது.
தங்களுடைய கடற்கரைகளை சரியான முறையில் பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பொருளாதாரத்தை உயர்த்தவும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஒரு புதிய கொள்கையை வெளியிட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் துறைமுகத்தை அடிப்படையாக கொண்ட உள்கட்டமைப்புகள் மாநிலத்தில் மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு 50 கிலோமீட்டர் தொலைவிலும் துறைமுகம் அமைப்பது, கப்பல் கட்டுமான தளங்களை உருவாக்குவது, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகப்படுத்துவது ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும். இதன் ஒரு பகுதியாக நெல்லூர் மாவட்டத்தில் கப்பல் கட்டுமான மற்றும் சீர் செய்யும் தளத்தை அமைப்பதற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு இந்த கப்பல் கட்டுமான தளம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான விரிவான ஆய்வறிக்கை உடனடியாக தயாரிக்கும் படி சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மொத்தம் 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த கப்பல் கட்டுமான தளம் அமைய உள்ளது. இதில் 1000 ஏக்கரில் கப்பல் கட்டும் மையமும், மீதமுள்ள இடத்தில் கப்பல் சீர் செய்யும் மையமும் அமைக்கப்பட உள்ளன.
இந்த திட்டத்திற்கான நிலத்தை ஆந்திர மாநில அரசு பெற்று தந்துவிடும், மத்திய அரசு 3,500 கோடி ரூபாயை முதலீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டுமான தளம் அமைக்கப்பட்டால் நேரடியாக 5000 வேலைவாய்ப்புகளும் மறைமுகமாக 30,000 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications