பெங்களூரில் கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களும் வேலைக்கு செல்பவர்களும் அவதிப்படும் காட்சிகளை நாம் கடந்த சில நாட்களாக கண்டு வருகிறோம். இதனிடையே ஆந்திர மாநில அரசு பெங்களூரில் இருக்கும் நிறுவனங்கள் ஆந்திராவிற்கு வரும்படியும் இங்கே சிறந்த கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன என்றும் அழைப்பு விடுத்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளரும் ஆந்திர மாநில அமைச்சருமான நர லோகேஷ் பெங்களூருவில் இருக்கும் நிறுவனங்கள் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் தொடங்குவதற்கு உகந்த கொள்கைகளை கொண்டிருக்கும் ஆந்திர பிரதேசத்திற்கு வரலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என பல்வேறு தலைவர்களும் புகார் கூறி வரக்கூடிய நிலையில் இந்த அழைப்பினை முன் வைத்துள்ளார்.

இந்தியாவில் ஐடி நிறுவனங்களுக்கான தலைநகரமாக பெங்களூரு செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒரு வார காலமாக இங்கே கனமழை காரணமாக போதிய மழைநீர் வடிகால் வசதிகள் இல்லாமல் ஆங்காங்கே மழை நீர் தேங்கி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஏராளமானவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்தே வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் சென்ற காட்சிகளை எல்லாம் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியும் புகழ்பெற்ற தொழில்துறை தலைவருமான மோகன்தாஸ் பை இதே நிலை நீடித்தால் பன்னாட்டு நிறுவனங்கள் பெங்களூருவை விட்டு வேறு மாநிலங்களுக்கு வெளியேறிவிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது போக்குவரத்து சரி செய்யாமல் விடப்பட்டது என்பன உள்ளிட்டவற்றை அவர் சுட்டிக் காட்டி இருந்தார் . மேலும் கர்நாடக மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் விமர்சனம் செய்திருந்தார்.
ஏராளமான பெங்களூரு வாசிகளும் இதே கருத்தினை சமூக வலைத்தளங்களில் முன் வைத்திருந்தனர். இந்த நிலையில் தான் இந்த நிலையில் மோகன்தாஸ் பை அவர்களின் எக்ஸ் பதிவை சுட்டிக்காட்டி நர லோகேஷ் வெளியிட்டுள்ள பதிவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாங்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம் , இங்கே உங்களுக்கான அனைத்து வசதிகளும் இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.
நர லோகேஷின் பதிவுக்கு பதில் அளித்துள்ள மோகன்தாஸ் பை, கடந்த ஆட்சியில் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு ஏற்பட்ட சேதங்களை சரி செய்தால் மட்டுமே புதிய முதலீடுகள் அங்கே வரும் என தெரிவித்துள்ளார். மேலும் அமராவதி தலைநகரத்தை மிகச் சிறந்த உள் கட்டமைப்பு கொண்ட நகரமாக உருவாக்கும் பட்சத்தில் தானாக பன்னாட்டு நிறுவனங்கள் உங்களை நோக்கி படையெடுக்கும் எனக் கூறியுள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications