ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் 15 அரிய புவி கனிமங்களின் (REE) மிகப்பெரிய இருப்புகளை கண்டுப்பிடித்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் பல மாநிலங்களில் புதிய கனிம இருப்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டது, இதில் முக்கியமாக ஜம்மு காஷ்மீரில் நாட்டிலேயே முதல் முறையாக 5.9 மில்லியன் டன் லித்தியம் தாது இருப்புக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்தது.
இதை தொடர்ந்து ஒடிசாவின் மூன்று மாவட்டங்களில் பல இடங்களில் தங்க படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் 15 அரிய புவித் கனிமங்களின் (REE) மிகப்பெரிய இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Lanthanide கனிமம்
செல்போன்கள், தொலைக்காட்சிகள், கணினிகள், மக்கள் தினசரி பயன்படுத்தும் ஆட்டோமொபைல்கள் உட்பட பல எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில் முக்கியமான கூறுகளில் ஒன்றாக லாந்தனைடு (lanthanide) தொடரின் அரிய புவி கனிமங்கள் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கண்டறியப்பட்டு உள்ளது.
syenites பாறைகள்
தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் அனந்தபூரில் உள்ள சைனைட்டுகள் போன்ற பாரம்பரியமற்ற அதாவது non-traditional பாறைகளைத் தேடும் ஒரு கணக்கெடுப்பை நடத்தினர், இந்த கணக்கெடுப்பில் வெற்றிகரமாக பல முக்கிய கனிமங்களைக் கண்டறிந்தனர்.
அரிய புவி கனிமங்கள்
இந்த ஆய்வில் முக்கியமான அரிய புவி கனிமங்கள் (Rare Earth Elements) என அறியப்படும் அலனைட், செரியேட், தோரைட், கொலம்பைட், டான்டலைட், அபாடைட், சிர்கான், மோனாசைட், பைரோகுளோர் யூக்சனைட் மற்றும் புளோரைட் ஆகியவை கண்டறியப்பட்டு உள்ளது.
லித்தியம் இருப்பு
மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல்கள் தயாரிப்பதற்கான முக்கியமான கனிமமான 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு, இந்திய புவியியல் ஆய்வு (GSI) மூலம் ஜம்மூ காஷ்மீர் பகுதியின் ரியாசி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
மின்சார வாகனம்
ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியத்தை இந்தியா பயன்படுத்தினால், மின்சார வாகனப் பிரிவில் உலகின் நம்பர் ஒன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக இந்தியா மாற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் கூறினார்.
தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி
தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (NGRI) என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான Council of Scientific and Industrial Research (CSIR) கீழ் 1961 இல் நிறுவப்பட்ட புவி அறிவியல் ஆராய்ச்சி அமைப்பாகும். இந்த அமைப்பு தான் தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் 15 அரிய புவி கனிமங்களின் (REE) மிகப்பெரிய இருப்புகளை கண்டுப்பிடித்துள்ளது.
இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு
2018-19 முதல் பிப்ரவரி 9 வரையிலான காலகட்டத்தில் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு (Geological Survey of India) மேற்கொள்ளப்பட்ட பணிகளின் அடிப்படையில் இந்த 51 கனிம தொகுதிகள் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த 51 கனிமத் தொகுதிகள் ஜம்மு மற்றும் காஷ்மீர் (UT), ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில் உள்ளது எனச் சுரங்க அமைச்சகம் அறிவித்தது.
சுரங்க அமைச்சகம்
Geological Survey of India (GSI) என்பது இந்தியாவின் ஒரு அறிவியல் நிறுவனம் ஆகும். இது 1851 ஆம் ஆண்டில், சுரங்க அமைச்சகத்தின் கீழ் இந்திய அரசு நிறுவப்பட்டது, இது உலகின் மிகப் பழமையான அமைப்புகளில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications