தமிழ்நாட்டின் முதலீடுகள் பறி போகிறதா? ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகளை தட்டி தூக்கிய ஆந்திர அரசு..!!

பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டிற்கும் ஆந்திராவுக்கும் கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில் மிக முக்கியமான கொரிய நாட்டு முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றிருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.

ஹூண்டாய் (Hyundai) மற்றும் கியா (Kia) நிறுவனங்களுக்கு வாகன உதிரிபாகங்களை சப்ளை செய்யும் மூன்று முன்னணி தென் கொரிய நிறுவனங்கள், தங்களது விரிவாக்க திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்குபதிலாக ஆந்திர பிரதேசத்தை தேர்வு செய்துள்ளன. ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் மொத்தம் 1,614 கோடி ரூபாய் முதலீடு செய்ய இந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

தமிழ்நாட்டின் முதலீடுகள் பறி போகிறதா? ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகளை தட்டி தூக்கிய ஆந்திர அரசு..!!

கொரியாவை சேர்ந்த ஹ்வாஷின் (Hwashin), செஷான் (Seoyon) மற்றும் ஐவாமெட் (Iwamet) ஆகிய நிறுவனங்கள் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களுக்கு வாகன உதிரிபாகங்களை சப்ளை செய்கின்றன. இவை தமிழ்நாட்டில் தங்களின் ஆலைகளை நிறுவ வேண்டுமென தமிழக தொழில்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆந்திரா இந்த முதலீடுகளை தட்டி சென்றுள்ளது தமிழ்நாட்டிற்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது என எக்கனாமிக் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

ஹ்வாஷின் (Hwashin) 850 கோடி ரூபாயும், செஷான் (Seoyon) நிறுவனம் 514 கோடி ரூபாயும் ஐவாமெட் (Iwamet) 250 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளன. இதற்காக இந்த மூன்று தென் கொரிய நிறுவனங்களும் ஆந்திர பிரதேச அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டங்கள் மூலம் மொத்தம் 1,418 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன என சொல்லப்படுகிறது.

Also Read

இந்த முதலீடுகளின் மூலம் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டம் தென்னிந்தியாவின் முக்கியமான ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக உருவெடுக்க உள்ளது. கடந்த ஜூலை மாதம் ஆந்திர பிரதேச அமைச்சர் நர லோகேஷ் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டு இந்த மூன்று நிறுவனங்களுடனும், பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இந்த பேச்சுவார்த்தைகள் உறுதியான முதலீட்டு ஒப்பந்தங்களாக தற்போது மாறியுள்ளன.

Recommended For You

தென் கொரியா சென்றிருந்தபோது ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் உதிரிபாக உற்பத்தியாளர்களை சந்தித்து ஆந்திராவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தோம். எங்கள் குழுவினர் தொடர்ந்து அந்நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதனை முதலீடுகளாக கொண்டு வந்துள்ளன என கூறியுள்ளார். முதலீட்டாளர்கள் ஆந்திர பிரதேசத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்கள் அரசு வழங்கும் என அமைச்சர் நர லோகேஷ் கூறியுள்ளார்.

முன்னதாக இந்த மூன்று கொரிய நிறுவனங்களிடமும் முந்தைய திமுக அரசின் போது தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன. ஆனால், ஒப்பந்தங்கள் ஆந்திராவிற்கு சென்றுவிட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+