இந்தியாவில் கோயில்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொருளாதார நடவடிக்கைகளின் மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாய் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ஆண்டு முழுவதும் பொருளாதார செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறும் பகுதி கோயில்கள் என குறிப்பிட்டார்.

இந்தியாவில் கோயில்கள், கோயில்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொருளாதாரத்தின் மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாய் என தெரிவித்த சந்திரபாபு நாயுடு மற்ற எந்த பொருளாதார செயல்பாடுகளுடன் ஒப்பிட்டாலும் கோயில் சார்ந்த பொருளாதாரம்தான் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் என்றார்.
கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது, வழிபாட்டுடன் தொடர்புடைய நடைமுறைகள், கோயில்களை சுற்றி வளர்ந்து வரும் வணிகங்கள் என 365 நாட்களுமே இவை நடக்கின்றன , நாம் அனைவரும் இந்த பொருளாதார நடவடிக்கையில் பங்களிப்பு தருகிறோம் என கூறினார்.
மேலும் பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக தான் நன்கொடை வழங்குகிறார்கள் அந்த நன்கொடை பணத்தை அவர்களின் விருப்பங்களுக்காக செலவிட வேண்டும் என்றும் எந்த ஒரு அரசாக இருந்தாலும் இதற்கு அடிபணிந்து தான் ஆக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச கோயில்கள் மாநாட்டின் நோக்கமாக செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு ,நிதி சார்ந்த தொழில்நுட்ப தீர்வுகள் நெறிமுறை ,நெறிமுறை சார்ந்த நன்கொடைகள், நிலைத்தன்மை, பாதுகாப்பு, கூட்ட கட்டுப்பாடு மற்றும் நிதி வெளிப்படத் தன்மை ஆகியவை இடம்பெற்றிருப்பதை அவர் பாராட்டினார்.
நம்முடைய வாழ்க்கையில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்தாலும் அது ஒருபோதும் கடவுளுக்கு மாற்றாக உருவாகி விட முடியாது என கூறினார். கடவுள் என்பவர் கடவுள் தான், எந்த ஒரு விஞ்ஞானியாக இருந்தாலும் தொழில் நுட்ப நிபுணராக இருந்தாலும் கடவுள் தீர்மானித்த விதியை தான் அவர் எதிர்கொண்டாக வேண்டும் என தெரிவித்தார்.
இந்தியாவிற்கு சரியான நேரத்தில் சரியான தலைவராக மோடி வந்திருக்கிறார் என குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, 2029 ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என கூறினார். 2047 ஆம் ஆண்டு இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரத்திலும், இந்து மக்கள் அதிகம் வசிக்கும் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு வெங்கடேஸ்வரர் கோயிலை கட்ட வேண்டும் என விரும்புவதாக அப்போது சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Story written by: Devika
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications