தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றாக இணைந்து மத்திய அரசின் delimitation முடிவுக்கு ஒன்றாக இணைந்து போராடி வரும் இதே வேளையில், புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தொடர்ந்து போட்டிப்போட்டு வருகிறது. இந்த வகையில் ஆந்திரப் பிரதேச மாநில அரசு கடந்த மூன்று மாதங்களில் ஈர்த்த தொழில்துறை முதலீடுகளில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு உள்ளது.
சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் தலைமையிலான ஆந்திரப் பிரதேச அரசு, இம்மாநிலத்திற்கு சுமார் ரூ.9,700 கோடி முதலீட்டை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் கடந்த 3 மாதத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த தென்னிந்திய மாநிலங்களில் ஆந்திரா முன்னோடியாக உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய மற்றும் பெரும் முதலீட்டாளர்கள் பட்டியலில் இந்த 3 மாதத்தில் கேரியர் குளோபல் மற்றும் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இணைந்துள்ளது.
கேரியர் குளோபல் என்பது ஏர் கண்டிஷனிங் துறையில் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 1,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு, தமிழ்நாட்டு எல்லைக்கு அருகில் இருக்கும் ஸ்ரீ சிட்டி தொழில்துறை பகுதியில் அதன் உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது.
கேரியர் குளோபல் நிறுவனத்திற்கு ஏற்கனவே மகாராஷ்டிரா மற்றும் குருகிராமில் இரண்டு உற்பத்தி ஆலைகள் உள்ளன. இருப்பினும், தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய தென்னிந்தியாவில் தனது முதல் தொழிற்சாலையை நிறுவ உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு சென்னையில் இந்த தொழிற்சாலையை நிறுவ பரிசீலனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து தென்கொரிய நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் ஸ்ரீ சிட்டியில் தனது முதல் தென்னிந்திய உற்பத்தி ஆலையை ரூ. 5,000 கோடி முதலீட்டில் அமைக்க உறுதியளித்துள்ளது. இந்த முடிவை எடுக்கும் முன், எல்ஜி நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இடங்களைத் தேடி வந்தது.
எல்ஜி நிறுவனத்திற்கு ஏற்கனவே நொய்டா மற்றும் புனே-வில் இரண்டு உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்த நிறுவனமும் ஸ்ரீ சிட்டியை தான் தேர்வு செய்துள்ளது. இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஆறு வென்டார்களும் சிட்டியில் தங்களுடைய உற்பத்தி தளத்தை நிறுவ உறுதியளித்துள்ளன. இதன் மூலம் கூடுதலாக ரூ. 2,000 கோடி முதலீடு கிடைக்கும்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கிடைக்காத பெரிய இடம் ஸ்ரீ சிட்டியில் தங்களுக்கு கிடைத்ததால் எல்ஜி நிறுவனம் இங்கு முதலீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து Premier Energies நிறுவனம் சுமார் 1700 கோடி ரூபாய் முதலீட்டில் நெல்லூரில் அமைந்துள்ள நாயடுபேட்டா இன்டஸ்ட்ரீயல் பார்க் பகுதியில் 4ஜிகா வாட் போட்டோவோல்டாயிக் சென் உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது.
இப்படி 3 நிறுவனங்கள் வாயிலாக சுமார் 9700 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஆந்திர மாநிலம் பெற்றுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications