நாடே டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கையில் கூகுள் நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் அதிநவீன கிளவுட் டேட்டா சென்டரை நிறுவவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. தெற்காசியாவில் தனது இருப்பை வலுப்படுத்தும் விதமாகவும், இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தை அதிகரிக்கவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் இந்த முதலீட்டின் மூலம் விசாகப்பட்டினம் ஒரு முக்கிய தொழில்நுட்ப மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் கிளவுட் சேவைகளுக்கு அதிகரித்து வரும் தேவையை இந்த புதிய டேட்டா சென்டர் பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது. அதோடு ஆந்திர மாநிலத்தில் நேரடி வேலை வாய்ப்புகளும், மறைமுக வேலை வாய்ப்புகளும் இதனால் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப உலகில் பல்வேறு மேம்பாடுகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு ஏற்ப ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் IT உலகில் புதிய மைல்கல்லை எட்டி வருகிறது. இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்துடன் கூகுள் இணைந்து செயல்பட இருக்கிறது. இந்தத் திட்டம் இணையத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்தி, வணிகங்களுக்கு நவீன கிளவுட் சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் நிறுவனம் அதிநவீன கிளவுட் டேட்டா சென்டர் அமைப்பதற்கு சிறந்த இடமாக விசாகப்பட்டினத்தை தேர்வு செய்துள்ளது. இதிலிருந்தது விசாகப்பட்டினம் உலகளாவிய டிஜிட்டல் நிலப்பரப்பில் முக்கிய இடமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 2025 ஆம் ஆண்டில் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று டேலண்ட் சொல்யூஷன் என்எல்பி சர்வீஸ் நிறுவனம் திங்களன்று தெரிவித்தது. அதற்கு ஏதுவாக தற்போது இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், மிசின் லேர்னிங் டேட்டா அனாலிக்ஸ், கிளவுட் டெக்னாலஜிஸ், சைபர் செக்யூரிட்டி போன்ற ரோல்களில் பணியாற்ற அதிக நபர்கள் 2025-ஆம் ஆண்டு வாக்கில் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக படித்து முடித்த இளைஞர்களுக்கு இது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் சில காலமாக முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கங்களை அறிவித்து வந்த நிலையில் கூகுள் நிறுவனத்திடம் வந்திருக்கும் அறிவிப்பு மற்றும் என்எல்பி சர்வீசஸ்-இன் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆகியவை வேலை தேடுபவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications