சமூக வலைத்தளங்கள் பயன்பாடு: ஆந்திராவை போலவே தமிழக அரசும் நடவடிக்கை எடுக்குமா?

உலகம் முழுவதுமே சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக 1 நிமிடங்களுக்கு உள்ளான வீடியோக்கள் வருகை பெரும்பாலானவர்களை எப்போதுமே சமூக வலைதள செயலிகளிலேயே மூழ்கி இருக்க செய்கிறது.

சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர். ஸ்கிராலிங் செய்து கொண்டே பொழுதை போக்குகின்றனர். குறிப்பாக பதின்ம வயதினர் மற்றும் குழந்தைகள் மத்தியில் இந்த சமூக வலைதள பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குழந்தைகளின் நடத்தையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக உலகம் முழுவதுமே ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக கவலைகளை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்கள் பயன்பாடு: ஆந்திராவை போலவே தமிழக அரசும் நடவடிக்கை எடுக்குமா?

குழந்தைகளின் கவனம் செலுத்தும் திறன் குறைகிறது, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கண்டெண்ட்டுகளை அவர்களும் நுகர்கிறார்கள் என கவலைகள் முன் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலியா , பிரான்ஸ் ஆகிய நாடுகள் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளன. இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநில அரசாங்கமும் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கு தயாராகி வருகிறது.

கடந்த ஆண்டு ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நபர்களின் குடும்பப் பெண்களின் புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. இதனை அடுத்து சமூக வலைதள பயன்பாடு தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவதற்காக ஆந்திர மாநில அரசு அமைச்சர்கள் குழு ஒன்றை நியமனம் செய்தது. ஐடி துறை அமைச்சர் நரே லோகேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் உள்துறை அமைச்சர் அனிதா , வீட்டு வசதித்துறை அமைச்சர் பார்த்தசாரதி, சுகாதாரத்துறை அமைச்சர் சத்திய குமார் யாதவ் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் பயன்பாடு: ஆந்திராவை போலவே தமிழக அரசும் நடவடிக்கை எடுக்குமா?

இந்த குழுவினர் சமூக வலைத்தள பயன்பாடுகளுக்கான விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். பல்வேறு நாடுகளிலும் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதள பயன்பாட்டிற்கு விதிக்கப்படும் தடையையும் கவனித்து அதன் சாதக பாகங்களை ஆய்வு செய்து இருக்கின்றனர்.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கலாம் என இந்த குழுவினர் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக இன்றைய தினம் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் ஆந்திராவில் நடைபெற இருக்கிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவிக்கப்படும். இந்த அமைச்சர்கள் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் சமூக வலைதள பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆனால் உடனடியாக தடை விதிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

எனவே உடனடியாக இல்லாமல் முதலில் ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக இந்த சமூக வலைதள பயன்பாடு தடை ஆந்திராவில் நடைமுறைக்கு வரும் என சொல்லப்படுகிறது. கோவா மாநில அரசும் சிறார்களுக்கான சமூக வலைத்தள பயன்பாடுகளுக்கு தடை விதிக்க ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசும் இது போன்ற ஒரு நடவடிக்கையை அறிவிக்குமா என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+