உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது ஆனால் கூடிய விரைவில் அதிக வயதானவர்கள் கொண்ட நாடாக இந்தியா மாற போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு, நிதி, தாமதமான திருமணம் என பல காரணங்களுக்கான இப்போது பல இந்திய தம்பதிகளும் ஒரு குழந்தையே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர்.
குறிப்பாக வட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டில் கூட ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து தங்களுடைய கவலைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து இருக்கிறது. ஆந்திராவின் பல கிராமங்களில் வயதானவர்கள் மட்டுமே உள்ளனர். வருங்காலத்தில் தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் தம்பதிகள் இப்போது அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் 1.6 ஆக குறைந்துள்ளது இது நாட்டின் சராசரியான 2.1-ஐ விட குறைவாக உள்ளது என அப்போது அவர் கூறியிருந்தார். மக்கள் தொகை அதிகமாக இருப்பதன் பலன் 2047 ஆம் ஆண்டு வரை தான் நமக்கு கிடைக்கும், அதன் பிறகு இளைஞர்களை விட வயதானவர்களை அதிகமாக இருப்பார்கள் என அவர் பேசியிருந்தார்.
இந்த சூழலில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது தற்போது எல்லாம் அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்று தான் சொல்லி வாழ்த்துகிறார்கள், இருந்தாலும் நாடாளுமன்ற தொகுதிகள் எல்லாம் குறையும் என்ற நிலை வருகிற போது நாம் மட்டும் எதற்கு அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் நாமும் 16 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாமே என பேசி இருந்தார்.
தென்னிந்திய மாநிலங்களில் மக்கள் தொகை இப்படி குறைந்து வரக்கூடிய சூழலில் தான் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அம்மாநில சட்டப்பேரவையில் முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அதாவது ஆந்திர மாநிலத்தில் மொத்த குழந்தை பிறப்பு விகிதத்தை தற்போதுள்ள 1.5 லிருந்து 2.1ஆக உயர்த்துவதற்கு அரசு இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதற்காக ஒரு புதிய நடைமுறையை கொண்டு வர பரிசீலனை செய்து வருவதாகவும் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடிய பெற்றோருக்கு டெலிவரி சமயத்திலேயே 25,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் வகையிலான திட்டத்தை கொண்டு வர ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்திருக்கிறார். இது மிகப்பெரிய ஒரு கேம் சேஞ்சராக மாறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏராளமான நாடுகள் தங்கள் மக்கள் தொகையில் தற்போது வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பதால் பெரும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றன எனக் கூறும் அவர் மார்ச் மாத இறுதிக்குள்ளாகவே மக்கள் தொகை மேலாண்மை கொள்கை கொண்டுவரப்பட்டு ஏப்ரல் மாதத்திலிருந்து செயல்படுத்தப்படும் என கூறியிருக்கிறார். இதனை அடுத்து மக்கள்தொகை மேலாண்மை கொள்கையின் வரைவினை அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி 2ஆவது குழந்தை பெற்று கொண்டால் 25000 நிதியுதவி கிடைக்கும். மூன்றாவது குழந்தை பெற்று கொண்டால் அந்த குழந்தை 5 வயது எட்டும் வரை மாதம் 1000 ரூபாய் நிதி, 18 வயது வரை இலவச கல்வி வழங்கப்படும் வகையில் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கருவுறுதல் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஓராண்டுகாலம் மகப்பேறு விடுப்பு, தந்தைக்கு 2 மாதம் விடுப்பு உள்ளிட்டவையும் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த வரைவு கொள்கை மீது மக்கள் 30 நாட்களுக்கு கருத்தினை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ள ஆந்திர மாநில அரசு அதன் பிறகு அரசு அதில் மாற்றங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தும் என கூறியுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications