ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தையில் ஆந்திராவை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் கணிசமான ஏற்றத்தை கண்டு வருகின்றன.
ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் நாரா சந்திரபாபு நாயுடு புதன்கிழமை முதல்வராகப் பதவியேற்றார்.

ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது மட்டுமின்றி மத்தியிலும் பாரதிய ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய அங்கம் வகிக்கிறது. இதனால் ஆந்திராவை சேர்ந்த நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள் அவற்றை தேர்வு செய்து வருகின்றனர்.
குறிப்பாக ஹெரிட்டேஜ் ஃபுட்ஸ் (Heritage foods), அமரா ராஜா எனர்ஜி (Amara raja energy), அரபிந்தோ பார்மா(Aurobindo pharma), அவந்தி ஃபீட்ஸ் (avanti feeds), சாகர் சிமெண்ட்(sagar cement), கோதாவரி டிரக் (Godavari drug), கோத்ரேஜ் அக்ரோவெட் (Godrej agrovet), கேஎன்ஆர் கன்ஸ்டிரக்சன் (knr construction), லிகிதா இன்ஃபிரா (likhita infra) ஆகிய நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
சந்திரபாபு நாயுடு அவர்களின் மகன் நர லோகேஷ் பங்குதாரராக இருக்கக்கூடிய நிறுவனம் ஹெரிடேஜ் ஃபுட்ஸ். கடந்த 5 வர்த்தக நாட்களில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 30% வரை உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் 35% பங்குகளை கொண்டுள்ளனர்.
இந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் நிறுவனமாக இது செயல்படுகிறது. இந்த நிறுவனம் ஹெரிடேஜ் நியூட்ரிவெட் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தையும் கொண்டுள்ளது. முதலீட்டாளர்கள் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் மீது கவனம் செலுத்தலாம் என்றும் வரும் காலங்களில் இந்த நிறுவனத்தின் பங்கு கணிசமாக உயரும் என்றும் என எஸ்எஸ்ஜே பைனான்சியல் மற்றும் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் அதிஷ் மத்லாவாலா தெரிவித்துள்ளார்.
அமராராஜா எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் 20% உயர்ந்துள்ளது . தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்பி ஜெயதே கல்லாவுக்கு சொந்தமான நிறுவனம் தான் அமரராஜா. வரும் காலங்களில் இந்த நிறுவனத்தின் பங்கு கட்டாயம் உயரும் என ஆய்வாளர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக இந்த நிறுவனம் பேட்டரி சந்தையில் நல்ல இடத்தை தக்க வைத்திருப்பதால் முதலீட்டாளர்கள் இதனை கவனத்தில் கொள்ளலாம் என ஸ்டாக்ஸ்பாக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் முடாரடி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவை பொறுத்தவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எப்போதுமே மாநிலத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடியவர். எனவே இவரது ஆட்சியின் கீழ் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது .
இதனால் கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன், கேசிபி, லிகிதா இன்ஃப்ரா, என்சிசி, பிட்டி இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் கேசிபி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 33 % உயர்ந்துள்ளது, கேஎன்ஆர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 20 % உயர்ந்துள்ளது. அதேபோல என்சிசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 22% ,பிட்டி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 15 % உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் இதற்கு முன்பு சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது இறால் உற்பத்தி மற்றும் இறால் வர்த்தகத்துக்கு சாதகமாக பல்வேறு கொள்கைகளை கொண்டு வந்தார். எனவே அவர் மீண்டும் முதலமைச்சராகி இருக்கும் நிலையில் அவந்தி ஃபுட்ஸ் மற்றும் அபெக்ஸ் ஃபுரோசன் ஆகிய நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில் இவற்றின் பங்கு மதிப்பு 20 % உயர்ந்துள்ளது.
அதேபோல ஆந்திராவை சேர்ந்த மருந்து நிறுவனங்களான நேட்கோ பார்மா மற்றும் அரவிந்தோ பார்மா நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் 17 மற்றும் 5% என்ற அளவில் உயர்வு கண்டுள்ளன.
தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பதும் மத்திய அரசுடன் கூட்டணியில் அங்கம் வகிப்பதும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது என எஸ்எஸ்ஜே பைனான்சியல் மற்றும் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் அதிஷ் மத்லாவாலா தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications