சென்னை நிறுவனங்களுக்கு வலைவீசும் ஆந்திரா.. ரகசிய போன் காலில் சொல்லப்பட்ட விஷயம்..!

சென்னை: தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மத்தியில் புதிய முதலீட்டையும், நிறுவனங்களையும் ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவருவது காலம் காலமாக இருந்து வரும் வேளையில், ஆந்திர பிரதேச அரசு ஒருப்படிக்கு மேலே சென்று சென்னையை சுற்றி ஆந்திர எல்லைக்கு அருகில் இருக்கும் நிறுவனங்களுக்கு கடந்த சில வாரங்களாக போன் கால் வருகிறது.

ஆந்திர அரசு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிற்துறை பூங்காவில் போதுமான நிலம் இல்லாததை தெரிந்துக்கொண்டு ஆந்திர அரசு சார்ப்பில் பல துறையை சேர்ந்த அதிகாரிகள் சென்னையை சுற்றியுள்ள அம்பத்தூர், பெருங்குடி, திருமழிசை, கிண்டி, திருமுடிவாக்கம், காக்களூர் போன்ற பகுதிகளில் இருக்கும் MSME நிறுவனங்களை அழைத்து தங்களுடைய விரிவாக்க திட்டத்திற்கு ஆந்திராவை தேர்வு செய்யுமாறு கூறுவதாக தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர்.

சென்னை நிறுவனங்களுக்கு வலைவீசும் ஆந்திரா.. ரகசிய போன் காலில் சொல்லப்பட்ட விஷயம்..!

இதுபோன்ற ரகசிய, அதிகாரப்பூர்வமற்ற போன் கால் பல தொழிலதிபர்களுக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் MSME நிறுவனங்கள் பலவற்றுக்கு ஆந்திராவில் விரிவாக்கம் செய்ய போன் கால் வந்துள்ளதாகவும், ஆந்திராவில் விரிவாக்கம் செய்தால் மானிய விலையில் நிலம், முதலீடு செய்யப்படும் தொகைக்கு மானியம், மின்சாரத்தில் வரி விலக்கு என பல சலுகைகளை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

Also Read

ஆந்திர அரசு தற்போது மிகப்பெரிய அளவில் முதலீடுகளை ஈர்த்து தனது மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. விமான நிலையம், டேட்டா சென்டர், உற்பத்தி ஆலைகள் என பல தரப்பட்ட முதலீடுகளையும், உள்கட்டமைப்பு விரிவாக்கத்தையும் தொடர்ந்து செய்து வரும் சந்திரபாபு நாயடு தலைமையிலான அரசு.

இதன் நீட்சியாகவே ஆந்திர எல்லையில் பகுதியில் இருக்கும் நிறுவனங்களை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

Recommended For You

இதற்காக பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது, இதில் முக்கியமானதாக டிசிஎஸ்-க்கு 21.16 ஏக்கர் நிலத்தை 99 பைசாவுக்கும், காக்னிசென்ட் நிறுவனங்த்திற்கு 21.31 ஏக்கர் நிலத்தை 99 பைசாவுக்கும் வழங்கியுள்ளது. இத்தகைய குறைந்த விலைக்கு நிலத்தை வாங்க வேண்டும் என்றால் அந்நிறுவனம் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 500 வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என கண்டிஷனை வைத்துள்ளது.

இத்தகைய நிலையில் நிலம், மின்சாரம் போன்றவற்றில் ஆந்திர அரசு கொடுக்கும் சலுகைகள் MSME நிறுவனங்களுக்கு மிகவும் பெரியது என்பதால் பலர் செலவுகளை குறைக்க ஆந்திராவுக்கு செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது, இதை உடனடியாக தடுக்க முதல்வர் விஜய் தலைமையிலான அரசும், தொழிற்துறை அமைச்சரும் வேகமாக புதிய தொழிற்பூங்கா, தொழிற்பேட்டையை உருவாக்கி போதுமான இடம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+