ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து தெலங்கானா தனியாகப் பிரிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்தும், இந்த இரு புதிய மாநிலங்களின் கூட்டுத் தலைநகரான ஹைதராபாத்தின் எதிர்காலம் குறித்து இன்னும் தெளிவின்மை நிலவுகிறது.
இரு மாநிலங்களின் பிரிவினை நிபந்தனைகளின்படி, ஹைதராபாத் ஜூன் 2, 2024 முதல் ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக இருக்காது. ஆனால், மாநிலத்தின் உள்நாட்டு அரசியல் காரணங்களால் புதிய தலைநகரம் குறித்த முடிவு தொடர்ந்து தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

2014 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டம், ஹைதராபாத் 10 ஆண்டுகளுக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் கூட்டுத் தலைநகராக இருக்கும் என்று குறிப்பிட்டது. அதற்குப் பிறகு, ஆந்திரப் பிரதேசம் தனது புதிய தலைநகரை அறிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமராவதியை தங்களது தலைநகரமாக அறிவித்தனர்.
இதேவேளையில் ஹைதராபாத்-ஐ பிரிக்கும் போதும் தோராயமாக ரூ.1.4 லட்சம் கோடி மதிப்புள்ள பொதுச் சொத்துகளைப் பிரித்துக் கொடுப்பது போன்ற பிரிவினைத் திட்டங்களின் பிற அம்சங்களும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. ஏனெனில், ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளால் மாநிலத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை.
தலைநகரங்களை அறிவிப்பதற்கான போராட்டம்: ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி (TDP) ஆட்சியின் போது, அமராவதியை ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவு கடும் அரசியல் பிரச்சனையை ஏற்படுத்தியது, மேலும் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான புதிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி (YSRCP) ஆட்சியால் இந்த முடிவு ரத்து செய்யப்பட்டது.
மாநிலத்தின் பல்வேறு பகுதியினரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, ஜெகன் மோகன் ரெட்டி ஒரு புதுமையான தீர்வை முன்வைத்தார். அதாவது, ஆந்திரப் பிரதேசத்திற்கு மூன்று தலைநகரங்கள் என்று அறிவித்தார்.
அதில், அமராவதி - சட்டப் பேரவைத் தலைநகராகவும், கர்னூல் - நீதித்துறை தலைநகராகவும், விசாகப்பட்டினம் துறைமுக நகரம் - நிர்வாகத் தலைநகராகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
மேலும், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர மக்களிடம் விசாகப்பட்டினத்திலிருந்து பணியாற்றுவதாக உறுதியளித்தார். ஆனால், 2024 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரையில் விசாகப்பட்டினத்திற்கு இடம் பெயரவில்லை.
கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி வி.வி. லட்சுமினாராயணன் நிறுவிய பாரத் தேசிய கட்சியை (Bharat National Party) கட்சி , ஆந்திரப் பிரதேச அரசு தனது சொந்த தலைநகரத்தை இறுதி செய்யும் வரை, ஹைதராபாத்தைக் கூட்டுத் தலைநகராக வைத்திருக்கும் சட்ட பிரிவை நீட்டிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு தலையிட்டு முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications