மத்தியில் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியை அமைக்க முக்கிய காரணமாக இருந்தது ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு-வின் TDP கட்சி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஏற்கனவே மத்திய அரசிடம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை ஆந்திர மாநிலத்திற்காக அறிவிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் புதன்கிழமை அன்று, வியட்நாம் நாட்டின் முன்னணி கார் நிறுவனமான வின்பாஸ்ட்டின் தலைமை செயல் அதிகாரி (CEO) பாம் சான் சவு-வை நேரில் சந்தித்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் மாபெரும் தொழிற்சாலையை அமைத்து வரும் வின்பாஸ்ட் ஆந்திர மாநில முதல்வரைச் சந்தித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரபாபு நாயுடு - வின்பாஸ்ட் CEO பாம் சான் சவு மத்தியிலான கலந்துரையாடலின் போது, ஆந்திரப்பிரதேசத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேட்டரி தயாரிப்பு ஆலைகளை நிறுவ வின்பாஸ்ட் நிறுவனத்தை அழைத்தார் சந்திரபாபு நாயுடு. மேலும், வின்பாஸ்ட் தொழிற்சாலை அமைப்பதற்கான தகுந்த நிலப்பரப்புகளைக் காட்டும், ஆய்வுகளை மேற்கொள்ள வசதிகளை ஏற்படுத்த ஆந்திர மாநில தொழில் துறை துறைக்கு உத்தரவிட்டார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இந்த கூட்டத்தின் போது, வின்பாஸ்ட் நிறுவனம் ஆந்திரப்பிரதேசத்தில் ரூ.4,000 கோடி முதலீடு செய்ய முன்வந்ததாக ஆந்திரப் பிரதேச தொழில் துறை அமைச்சர் டி.ஜி.பாரத்குமார் தெரிவித்தார். மேலும், "கர்நூல் மாவட்டத்தில் உள்ள ஓர்வக்கல் அல்லது கிருஷ்ணபட்னத்தில் எலக்ட்ரிக் வாகன மற்றும் பேட்டரி உற்பத்திக்கான ஒருங்கிணைந்த ஆலைகளை நிறுவுவதற்கான சாத்தியம் உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார். அடுத்த ஒரு மாதத்திற்குப் பிறகு இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் இரண்டாவது ஆலை அமைப்பது குறித்து இதுவரையில் பேசாத வின்பாஸ்ட், தூத்துக்குடி தொழிற்சாலையை வேகமாக கட்டும் பணிகளை செய்து வருகிறது. இதற்கிடையில் சந்திரபாபு நாயுடு - வின்பாஸ்ட் CEO பாம் சான் சவு மத்தியிலான சந்திப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
வியட்நாமிய எலக்ட்ரிக் வாகன நிறுவனமான வின்பாஸ்ட், இந்தியாவில் இரண்டாவது உற்பத்தி ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளது மூலம் டெஸ்லா போன்று உலகளாவிய எலக்ட்ரிக் வாகன சந்தைகளில் உள்ள பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாடு மாநில அரசுடனும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது வின்பாஸ்ட் நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளுக்காக இந்தியாவில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்தது.
இந்த நிலையில் வின்பாஸ்ட் தரப்பில் இதுவரையில் எவ்விதமான அறிவிப்புகளும் வெளியிடாத நிலையில், இது வெறும் மாரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கலாம். இதேவேளையில் வின்பாஸ்ட்-க்கு பிரச்சனையான அரசு சலுகையும் EV கொள்கையில் செய்யப்படும் மாற்றம் மூலம் கிடைக்க உள்ளதால், தூத்துக்குடி தான் சிறந்த உற்பத்தி தளமாக இருக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications