ஓசூர் விமான நிலையத்திற்கு வேட்டு.. அடித்து ஆடும் ஆந்திர அரசு.. முதல்வர் விஜய்-யின் அடுத்த ஆக்ஷன் என்ன..?

சந்திரபாபு நாயடு தலைமையிலான ஆந்திர அரசு, அம்மாநிலத்தை வேகமாக வளர்ச்சி அடையும் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து பல துறையில் முதலீட்டை ஈர்த்து வரும் வேளையில், வெளிநாட்டு முதலீடுகளையும், ஏற்றுமதி வர்த்தகத்தையும் மேம்படுத்தவும் பல திட்டங்களை உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில் ஆந்திராவை இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களுக்கு வேகமான பயண சேவை மூலம் இணைக்கும் பொருட்டு, ஆந்திராவில் 7 சர்வதேச விமான நிலையங்களை அமைக்க முடிவு செய்து இதற்கான பணிகளை நடத்தி வருகிறது.

ஓசூர் விமான நிலையத்திற்கு வேட்டு.. அடித்து ஆடும் ஆந்திர அரசு.. முதல்வர் விஜய்-யின் அடுத்த ஆக்ஷன் என்ன..?

தமிழ்நாடு எல்லைக்கு அருகில் இருக்கும் குப்பம் பகுதியிலும் மற்றும் ஆந்திராவுக்கு வடக்கு எல்லையில் இருக்கும் ஸ்ரீகாகுளம் பகுதியில் கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் விமான நிலைய வளர்ச்சி அமைப்பு, இவ்விரு இடத்திலும் விமான நிலையம் அமைப்பதற்கான விண்ணப்பத்தைப் பெறும் பணிகளை விரைவில் துவங்க உள்ளது.

ஆந்திர மாநில அரசு ஏற்கனவே அம்மாநிலத்தின் விமான நிலைய கட்டமைப்பை மொத்தமாக மேம்படுத்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் அமராவதி, குப்பம், ஸ்ரீகாகுளம் ஆகிய பகுதிகளில் விமான நிலையத்தை அமைக்கவும், விரிவாக்கவும் மத்திய அரசிடம் திட்ட அறிக்கையை முன்வைத்துள்ளது.

தற்போது ஒப்புதல் பெற்ற குப்பம் விமான நிலையத்தை 1200 ஏக்கரில் சுமார் 1700 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஸ்ரீகாகுளம் விமான நிலையத்தை 1100 ஏக்கரில் 750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது ஆந்திர அரசு.

Also Read

இதில் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால் குப்பம் விமான நிலையத்திற்கும் ஓசூருக்கு72 கிமீ, இதுவே சூளகிரிக்கு 67 கிமீ தொலைவில் மட்டுமே உள்ளது. கிருஷ்ணகிரியிலிருந்து, ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு வெறும் 36 கிமீ மட்டுமே தொலைவு கொண்டது.

குப்பத்தில் புதிய விமான நிலையம் உருவாகும் பட்சத்தில் ஓசூருக்கான விமான நிலையத்தின் தேவையில்லாமல் போகும், இதனால் பெரும் வளர்ச்சி வாய்ப்பையும், முதலீட்டு வாய்ப்பையும் தமிழ்நாடு அரசு இழக்கும்.

ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் போதே, பெங்களூர் விமான நிலையத்திற்கு மாற்றுத் தீர்வு என்ற அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. ஓசூர், ஆந்திரா, பெங்களூரில் தெற்கு பகுதி ஆகிய பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு 3 - 4 மணிநேரம் பயணத்தைக் குறைத்து விமானச் சேவை அளிக்கும் திட்டத்தில் தான் உருவாக்கப்பட்டது.

Recommended For You

இதேபோல் தமிழ்நாடு அரசு, ஓசூரின் வேகமான வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவும், பெங்களூரில் முதலீடு செய்ய திட்டமிடுவோருக்கு மாற்றாக ஓசூரை உருவாக்கவும் 2000 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பன்னாட்டு விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்து.

ஆனால் இந்த விமான நிலையம் அமைக்கப் பெங்களூர் சர்வதேச விமான நிலைய அமைப்பு மத்திய அரசிடம் செய்த ஒப்பந்தம், மத்திய பாதுகாப்புத் துறையிடம் பெறப்படாத ஒப்புதல் மூலம் முடங்கிக் கிடக்கிறது.

இந்த நிலையில் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஏற்கனவே பரந்தூர் திட்டத்தைக் கைவிட்ட நிலையில், ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில் பெரியளவிலான முயற்சிகள் எடுக்காமல் இருக்கும் வேளையில், ஆந்திரப் பிரதேச அரசு குப்பத்தில் விமான நிலையம் அமைப்பதில் வேகம் காட்டி வருகிறது.

இதற்கிடையில், முதல்வர் விஜயின் அடுத்த ஆக்ஷன் மோடு என்னவாக இருக்கும்..?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+