அமெரிக்க இசை நிகழ்ச்சியில் ஆஸ்ட்ரோனமர் (Astronomer) தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்டி பைரனின் சர்ச்சைக்குள்ளான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (MASSACHUSETTS) மாகாணத்தில் கோல்ட் ப்ளே என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆஸ்ட்ரோனமர் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிஇஓ ஆன்டி பைரனும், அதே நிறுவனத்தை சேர்ந்த மனித வளத்தலைவர் கிளிஸ்டின் கபோட்டும் நெருக்கமாக இருந்தனர். இந்நிகழ்ச்சியை அங்கு ஆயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக அந்த ஜோடியின் முகங்கள் பெரிய திரையில் தோன்றின.

அப்போது, இருவரும் கேமராவைத் தவிர்ப்பதற்காக தலையை குனிந்து தங்களை மறைத்துக் கொண்டனர். இதை பார்த்த கோல்ட் பிளே பாடகர் கிறிஸ் மார்ட்டின், "இருவரும் காதல் உறவில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருப்பார்கள்" என்று கேலி செய்தார். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற நிலையில், இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.
இது பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு, நெட்டிசன்கள் மீம்களாகவும் உருவாக்கின. மேலும், இது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதேபோல், டிக்டாக்கில் பதிவேற்றப்பட்ட முதல் காணொளியை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். ஆன்டி பைரனும் கிளிஸ்டின் கபோட்டும் கட்டிப் பிடித்தபடி போஸ் கொடுத்திருந்த வீடியோ, சர்ச்சைக்குள்ளானதால், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று ஆஸ்ட்ரோனமர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
பின்னர், சர்ச்சைக்குள்ளான இருவரும் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியது. இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர்கள் குழு முறையான விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும், விரைவில் கூடுதல் தகவல்களைப் பகிர்வோம்" என்றும் அந்த நிறுவனம் முன்னதாக கூறியிருந்தது.
இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது, ஆன்டி பைரன் தன்னுடைய தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ.) பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்ட்ரோனமர் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "ஆன்டி பைரன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதை இயக்குநர்கள் குழுவும் ஏற்றுக் கொண்டது" என தெரிவித்துள்ளது. அதேசமயம், நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக இணை நிறுவனர் மற்றும் தலைமை ப்ராடக்ட் அதிகாரி பீட் டிஜாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் இருப்பது ஆன்டி பைரன் என கூறுகின்றன. ஆனால், அதில் இருப்பது தான்தான் என்பதை ஆன்டி பைரன் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அதேபோல, அந்த வீடியோவில் அவருடன் இருப்பது அஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் மனிதவள (HR) இயக்குநர் கிறிஸ்டின் கபோட் என அடையாளம் காணப்பட்டது. ஆனால், அவரும் இதுவரை தன்னுடைய அடையாளத்தை உறுதிப்படுத்தவில்லை.
இதுதொடர்பாக அஸ்ட்ரோனமர் (Astronomer) நிறுவனம் கூறுகையில், "அந்த சர்ச்சைக்குரிய வீடியோவில் இருப்பது எங்கள் நிறுவனத்தின் ஊழியர் அல்ல. ஆன்டி பைரன் இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும், அவர் பேசியதாகச் சொல்லப்படும் செய்திகள் அனைத்தும் தவறானவை" என்று விளக்கம் அளித்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications