யுஎஸ்வி இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் லீனா திவாரியின் நிகர சொத்து மதிப்பு ரூ.39,860 கோடி ஆகும். இதன் மூலம் அவர் நாட்டின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியானார். பயோகான் கிரண் மஜும்தார் ஷா, நைக்காவின் ஃபல்குனி நாயர் லீனா திவாரிக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.
1961 ஆம் ஆண்டில் லீனாவின் தந்தை விட்டல் காந்தி ரெவ்லான் பார்மா-வை (Revlon Pharma) தொடங்கினார். இப்போது ரெவ்லான் பார்மாவை லீனா திவாரி நிர்வாகம் செய்து வருகிறார்.

இந்தியாவின் ஐந்தாவது பணக்காரப் பெண்மணியான லீனா திவாரியின் மகள் அனீஷா காந்தி திவாரி. இவர் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி மற்றும் மாலிக்கியூலார் பயாலஜியில் ஹானர்ஸ் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
கேம்பிரிட்ஜின் மசாசுசெட்ஸ் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜியில் மாலிக்கியூலார் பயாலஜியில் பிஹெச்டி பட்டம் பெற்றுள்ளார். யுஎஸ்வி போர்டின் உறுப்பினராக 2022 ஆம் ஆண்டில் அனிஷா காந்தி திவாரி நியமிக்கப்பட்டார். அனிஷாவும் அவரது தாயார் லீனாவும் மீடியா வெளிச்சத்திற்கு வருவதை விரும்பாதவர்கள்.
யு.எஸ்.வி.யின் நிர்வாகத்தை லீனாவுடன் சேர்ந்து நடத்தும் பிரசாந்த் திவாரி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். பிரசாந்த் திவாரி இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) மற்றும் அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துள்ளார். இவர்களுக்கு அனீஷா காந்தி திவாரி என்ற மகள் உள்ளார்.
அவரது பார்மா நிறுவனம் கார்டியோ வாஸ்குலர் மற்றும் டயாபடிக் மருந்துகளை தயாரித்து வருகிறது. யு.எஸ்.வி நீரிழிவு மற்றும் இருதய மருந்துகளில் நிபுணத்துவம் பெற்றது. பயோசிமிலர் மருந்துகள், ஊசி மருந்துகள் மற்றும் செயலில் உள்ள மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு போர்ட்ஃபோலியோ.
65 வயதான லீனா திவாரி பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் மும்பை பல்கலைக்கழகத்தில் பிகாமும் படித்துள்ளார்.
பல்வேறு மனிதநேய நடவடிக்கைகளில் லீனா முனைப்பாக ஈடுபட்டு வருகிறார். வசதியற்ற பெண்களின் கல்விக்கு உதவிகளை செய்து வருகிறார்.
தனது தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருவதோடு சமூக ஆர்வலராகவும் லீனா திவாரி உள்ளார். ஓய்வு கிடைக்கும்போது டிராவல் செய்வது லீனா திவாரிக்கு பிடித்தமான செயலாகும்.
2018 ஆம் ஆண்டில், ரெவ்லான் ஹெல்த்கேர் நிறுவனம், ஜெர்மன் ஜெனரிக்ஸ் நிறுவனமான ஜூடா பார்மாவை மிகப் பெரிய தொகைக்கு வாங்கியது.
2022 இல் திவாரியின் மகள் அனீஷா காந்தி ரெவ்லான் குழுவில் சேர்ந்தார். 2022ல் 51 ஆவது இடத்தில் இருந்த திவாரியின் நிகர மதிப்பு அந்த ஆண்டு 3.74 பில்லியன் டாலர் (ரூ. 30,205.74 கோடி) ஆகும்.
லீனா திவாரியின் மகன் விலாஸ் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சலீஸ் நகரத்தில் ஒரு கேமிங் அவுட்பிட்டை நடத்தி வருகிறார். அவரும் ரெவ்லான் குழு போர்டில் உறுப்பினராக உள்ளார்.


Click it and Unblock the Notifications