இந்தியாவின் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் அடுத்தடுத்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் மற்றொரு புயல் இந்திய முதலீட்டு சந்தையை ஆட்டிப்படைக்க உள்ளது.
கௌதம் அதானி-யின் 236 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக சாம்ராஜ்ஜியம் ஒரு மாதத்தில் ஐந்தில் மூன்று பங்கு சந்தை மதிப்பீட்டை இழந்து ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் பெரும் நிறுவன முதலீட்டாளர்கள் வரையில் பெரிய அளவிலான நஷ்டத்தை கொடுத்ததுள்ளது. இதனால் அதானி பங்குகளை வைத்துக்கொள்ள விரும்பம் இல்லாமல் இருந்தலும், முதலீட்டு தொகைக்காவது விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் இயங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நன்கு அறியப்பட்ட தொழிலதிபரான அனில் அகர்வால் மூலம் புதிதாக ஒரு புயல் உருவாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட்
ஒரு காலத்தில் லண்டனில் பட்டியலிடப்பட்ட வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட் பெயரில் ஆயிரம் கோடி கடன் இருக்கும் வேளையில் ஜனவரி மாதம் முதிர்வடைந்த சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரம் கடனுக்கு வேதாந்தா குழுமத்தின் தலைவரான அனில் அகர்வால் இன்னும் திருப்பி செலுத்தவில்லை. இந்த கடன் சுமையை குறைக்க முயற்சித்து தோல்வி அடைந்துள்ளார்.
விலைவாசி உயர்வு பிரச்சனை
கடந்த ஆண்டு இதே நேரத்தில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கும் போதும், உக்ரைனில் ரஷ்யாவின் போர் ஆகியவற்றுக்கு மத்தியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் விலைவாசி உயர்ந்தது.
இணைப்பு
இந்த நிலையில் அனில் அகர்வால் கடனில் மூழ்கிய வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தை அதன் பண வளம் நிறைந்த மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தா லிமிடெட் உடன் ஒன்றிணைக்கும் யோசனையை முன் வைத்தார். ஆனால் இத்திட்டம் முன்னும் நிறைவேறவில்லை.
கடன் அளவு
இந்த இணைப்பு எளிதாக நடந்திவிட முடியாது, வேதாந்தா ரிசோர்சஸ் அதன் நிகர-கடன் சுமையை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலரா இருந்து 8 பில்லியன் டாலராக குறைத்துள்ளது. இதற்கிடையில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தா லிமிடெட் கடந்த மாதம் ஈவுத்தொகையை அறிவித்தது.
இணைப்பு சாத்தியம்
இதனால் வேதாந்தா குழுமத்தின் தாய் நிறுவனம் மற்றும் அதன் பெரும்பான்மை பங்குதாரர்கள் செப்டம்பர் 2023 வரை அதன் இணைப்பையும், கடன் இருப்பை குறைப்பை நிறைவேற்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று S&P Global Inc தெரிவித்துள்ளது. இதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லை.
கடன் திரட்டும் முயற்சி
ஆனால் அனில் அகர்வால் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை பெற முயன்றபோது தான் பெரும் தடையை எதிர்கொண்டார். வேதாந்தா ரிசோர்சஸ் பத்திரதாரர்களுக்கு ஆகஸ்ட் 2024 நோட்டின் விலையை டாலரில் 70 காசுகளுக்குக் கீழே செலுத்துவதற்கு நிலைமை நிச்சயமற்றதாக மாறியுள்ளது. இந்த நிலையில் நிதி திரட்டலுக்கு அடுத்த சில வாரங்கள் முக்கியமானதாக இருக்கும்.
பி-கிரெடிட் மதிப்பீடு
இந்த முயற்சி தோல்வியுற்றால், ஏற்கனவே மிகவும் மோசமாக இருக்கும் பி-கிரெடிட் மதிப்பீடு கூடுதலான பாதிப்பையும், மதிப்பீட்டு சரிவை சந்திக்க கூடும் என்று எஸ்&பி இந்த மாதம் தெரிவித்துள்ளது. இந்த கடன் திரட்டுவது வைத்து தான் அனில் அகர்வாலின் ஹிந்துஸ்தான் ஜிங்க், பாக்ஸ்கான் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை திட்டமும் அடங்கும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications