இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான வேதாந்தா குழுமம் தங்களுடைய நிறுவனங்களை ஆறு புதிய நிறுவனங்களாக பிரிக்க உள்ளது. ஏற்கனவே இது பற்றிய அறிவிப்பு வெளியான போதிலும், வேதாந்தா குழுமத்தின் தலைவரான அனில் அகர்வால் மீண்டும் ஒரு முறை இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தங்கள் நிறுவனத்தை ஆறு நிறுவனங்களாக பிரிக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தற்போது வேதாந்தா நிறுவனத்தில் ஒரு பங்கினை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு மற்ற ஐந்து நிறுவனங்களிலிருந்தும் ஒவ்வொரு பங்கு கிடைக்கும். இதன் மூலம் ஒரு பங்கிற்கு 5 பங்குகள் கூடுதலாக கிடைக்கும்.

புதன்கிழமை அன்று நடைபெற்ற ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அனில் அகர்வால் வேதாந்தான் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 276 சதவீத லாபத்தையும் 65 சதவீத ஈவுத்தொகையும் பெற்று தந்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமின்றி வேதாந்தா நிறுவனம் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 35 பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருப்பதாக கூறியுள்ளார். அதாவது இந்தியாவின் ஜிடிபியில் இது 1.4 சதவீதமாகும். வேதாந்தா குழுமத்தை பொறுத்தவரை இந்தியாவில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மிகப்பெரிய ஒரு தனியார் நிறுவனம் ஆகும்.
மேலும் இந்தியாவின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தியாளராகவும், இந்தியாவிலேயே துத்தநாகம் மற்றும் வெள்ளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரே நிறுவனமாகவும் இருக்கிறது. அது மட்டும் இன்றி மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் நிறுவனத்தை ஆறு நிறுவனங்களாக பிரிக்கப் போவதாக தெரிவித்திருக்கும் அனில் அகர்வால் தற்போது இதில் ஒரு ஈக்விட்டி பங்குகளை வைத்திருக்கக் கூடிய முதலீட்டாளர்களுக்கு புதிய நிறுவனங்களிலிருந்தும் அதற்கு நிகராக ஒவ்வொரு பங்குகள் கிடைக்கும் அதாவது ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு இனி அது கூடுதலாக ஐந்து பங்குகள் சேர்ந்து கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் பிரிக்கப்பட்டவுடன் அதன் செயல்பாடுகள் அனைத்தும் தனித்தனியாக கணக்கீடு கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி வேதாந்தா நிறுவனமானது வேதாந்த அலுமினியம், வேதாந்தா எண்ணெய் மற்றும் எரிவாயு, வேதாந்தா பவர், வேதாந்தா ஸ்டீல் மற்றும் ஃபெரஸ் மெட்டீரியல், வேதாந்தா பேஸ் மெட்டல்ஸ் மற்றும் வேதாந்தா லிமிடெட் என பிரிகிறது.
வேதாந்தா நிறுவனம் 2024 ஆம் நிதி ஆண்டில் 1, 41,793 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 11 ரூபாய் என்ற அளவில் ஈவுத்தொகையும் அளித்திருக்கிறது. இதனிடையே தங்களது நிறுவனம் 2050 ஆம் ஆண்டிற்குள் பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வு என்ற இலக்கை எட்டிவிடும் என தெரிவித்துள்ள அனில் அகர்வால் இந்த நோக்கத்திற்காக 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!



Click it and Unblock the Notifications