இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான வேதாந்தா லிமிடெட் அரசியல் கட்சிகளுக்குச் சுமார் 200 கோடி ரூபாயை நன்கொடையாகவும், அன்பளிப்பாகவும் அளிக்க அதன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் பட்டியலிடப்பட்ட வேதாந்தா லிமிடெட் நிர்வாகக் குழு, ஜனவரி மாதம் வரவிருக்கும் டாலர் மதிப்புள்ள கடன் பத்திரங்களுக்குச் சுமார் 1-பில்லியன் டாலர் தொகையை வழங்குவதற்கு அதன் தாய் நிறுவனம் நிதி திரட்ட போராடி வரும் வேளையில் அரசியல் கட்சிகளுக்கு ரூ. 200 கோடி பங்களிப்பை வழங்க ஒப்புதல் அளித்ததுள்ளதாக ஈடி பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக ஜூன் 2022 இல் ஒப்புக்கொள்ளப்பட்ட பயன்படுத்தப்படாத ரூ.57 கோடி வரம்பைப் பயன்படுத்தவும் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மார்ச் 2025 வரையில் தற்போது அறிவிக்கப்பட்ட 200 கோடி ரூபாய் சேர்த்து 57 கோடி ரூபாயை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாகவும், அன்பளிப்பாகவும் நிதியுதவியைச் செய்யலாம்.
வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் தீர்மானத்தின்படி, நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் மற்றும் துணைத் தலைவர் நவீன் அகர்வால் ஆகியோர் இந்தத் தொகையை நேரடியாகவோ அல்லது தேர்தல் டிரஸ்ட் வாயிலாகவோ, தேர்தல் பத்திரங்கள் மற்றும் பிற வடிவத்திலும் பயன்படுத்த அதிகாரம் பெற்றுள்ளனர்.
வேதாந்தா குழுமத்தின் நிர்வாகக் குழு நவம்பர் 4 ஆம் தேதி இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு தேர்தல் பத்திர விற்பனையின் 29 வது தவணை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையே நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் பத்திர விற்பனை முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
வேதாந்தா அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 5 வருடத்தில் 457 கோடி நன்கொடை அளித்துள்ளார். இதில் நடப்பு நிதியாண்டில் மட்டும் 155 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார், இந்த 155 கோடி ரூபாய் அளவீடு ஜூன் மாத முடிவில் வெளியிடப்பட்டது.


Click it and Unblock the Notifications