BPCL பங்குகளை கைப்பற்ற 8 பில்லியன் டாலர் நிதி திரட்டும் வேதாந்தா அனில் அகர்வால்..!

மத்திய அரசின் 2.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட்-ன் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பங்குகளை வாங்க வேதாந்தா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், BPCL பங்குகளை வாங்க வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் பல்வேறு வங்கிகளிடம் சுமார் 8 பில்லியன் டாலர் அளவிலான கடனை கேட்டு வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் வளர்ச்சிக்காகவும், புதிய வளர்ச்சி திட்டங்களுக்காகத் தேவைப்படும் நிதியைத் திரட்டும் நோக்கில் பல அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டது.

 BPCL பங்குகளை கைப்பற்ற 8 பில்லியன் டாலர் நிதி திரட்டும் வேதாந்தா அனில் அகர்வால்..!

இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் 2வது பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமும், வருடம் 8000 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே அளிக்கும் மாபெரும் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது.

இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு 4 முறை விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்-ஐ நீட்டிக்கப்பட்டு நவம்பர் 16ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்நிறுவனப் பங்குகளைக் கைப்பற்றப் பல நிறுவனங்கள் விண்ணப்பம் செய்த நிலையில் வேதாந்தா நிறுவனமும் விருப்ப விண்ணப்பம் கொடுத்து.

BPCL நிறுவன பங்குகளைக் கைப்பற்ற வேதாந்தா குழுமம் கொடுக்க ஒப்பந்தம் அரசு ஒப்புதல் அளித்து 2வது கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ள நிலையில், 20 பில்லியன் டாலர் மதிப்பிலான BPCL நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளைக் கைப்பற்ற சுமார் 8 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையைக் கடனாகப் பெற பல்வேறு வங்கிகளுடன் அனில் அகர்வால் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இதில் குறிப்பாக ஜேபி மோர்கன் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இதேபோல் வேதாந்தா 2 தனியார் பங்குச்சந்தை நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, அப்போலோ குளோபல் மற்றும் திங் கேஸ் ஆகிய நிறுவனங்களுடன் BPCL நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளைக் கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நிதி திரட்டல் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

வேதாந்தா குழுமம் தற்போது பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற முடிவு செய்து அதற்கான பணியில் இருக்கிறது. இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனம் தற்போது 1.25 லட்சம் கோடி ரூபாய்க் கடனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+