இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அனில் அகர்வால்-க்கு தலைமை விகிக்கும் வேதாந்தா குழுமம் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன், பேக்கேஜிங் டெஸ்டிங் யூனிட் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப் யூனிட் ஆகியவற்றை அமைக்கும் திட்டத்தில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் கூட்டணி முறிந்த பின்பும் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது.
இந்த நிலையில் வேதாந்தா குழுமம் தனது செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப் யூனிட் அமைக்க திட்டமிட்ட குஜராத் மாநிலத்தில், இன்று செமிகண்டக்டர் துறைக்கான Semicon India 2023 கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் அமெரிக்காவின் AMD நிறுவனம் அடுத்த 5 வருடத்தில் 400 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது.

இந்த முக்கியமான கட்டத்தில் அனில் அகர்வால் தனது செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப் யூனிட் அமைக்க மாபெரும் திட்டத்தின் முதல் கட்டத்தில் 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளதாக முன்னணி பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளது.
இந்த மாபெரும் நிதி தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கடன் மற்றும் பங்குகளின் மூலம் மூலதன ஒதுக்கீடு செய்யப்படும் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் லைவ்மின்ட் உடனான பேட்டியில் தெரிவித்தார். இந்த 5 பில்லியன் டாலர் முதலீட்டில் உருவாக்கப்பட்டும் கட்டமைப்பு தான் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப் வர்த்தகத்திற்கு அடித்தளமாக இருக்கும் எனவும் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் மூன்று தொழில்நுட்ப வழங்கும் நிறுவனர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 2.5 ஆண்டுகளில் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் யூனிட்டில் இருந்து முதல் சிப் தயாரிக்கப்படும் என்றும் அனில் அகர்வால் உறுதியளித்தார்.
மேலும் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப் தொழிற்சாலைகளை முழுமையாக கட்டி முடிக்க 19 முதல் 20 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் என தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் இன்று நடந்த Semicon India 2023 கூட்டத்தில் செமிகண்டக்டர் துறையில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 50 சதவீத நிதியியல் உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இது மிகப்பெரிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications