பாக்ஸ்கான் நிறுவனம் குஜராத்தில் பெரும் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க வேதாந்தா உடன் அமைக்கப்பட்ட கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது வேதாந்தா - பாக்ஸ்கான் இணைந்து உருவாக்கிய கூட்டணியில் இருந்து தங்களுடைய பெயரை நீக்குவதற்கான பணிகளை செய்துவருவதாக பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான தொழிற்சாலையை அமைக்கத் தனியாக விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வேதாந்தா தனது திட்டத்தை வெளியிட்டு உள்ளது.

வேதாந்தா குழுமம் இந்தியாவில் தனது முதல் செமிகண்டக்டர் ஃபவுன்டரி அமைக்கும் திட்டத்திற்கான பணிகளை செய்துவருவதாகவும், இதற்கான கூட்டணி நிறுவனங்கள் வரிசைக்கட்டி நிற்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் செமிகண்டக்டர் ஃபேபிரிக்கேஷன் திட்டத்தில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்துள்ளது.
இதுக்குறித்து வேதாந்தா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நிறுவனத்தின் செமிகண்டக்டர் பிரிவு 40nm செமிகண்டக்டர் சிப் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உரிமத்தை முன்னணி IDM நிறுவனத்திடம் பெற்றுள்ளோம். விரைவில் 28nm செமிகண்டக்டர் சிப் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உரிமத்தை பெற உள்ளோம் என தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம் தனது தாய் நிறுவனமான Volcan Investments Limited கீழ் இயங்கி வந்த டிவின் ஸ்டார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வேதாந்தா குழுமம் கைப்பற்றும் போதே, பாக்ஸ்கான் கூட்டணியில் இருந்து விலகுவது பலரும் கணித்தனர். இதன் மூலம் Twin Star Technologies முழுவதும் தற்போது வேதாந்தா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே தொழிற்சாலைகளை அமைப்பதற்காக தைவான் நாட்டின் பாக்ஸ்கான் மற்றும் வேதாந்தா குழுமம் இணைந்தது. குஜராத்தில் டோலேரா பகுதியில் இந்த மாபெரும் 1.54 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.


Click it and Unblock the Notifications