இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த அனில் அம்பானியின் வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் பெரும் கடனில் மூழ்கியது மட்டும் அல்லாமல் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அனில் அம்பானி தலைமை வகித்த ரிலையன்ஸ் கேப்பிடல் சுமார் 24000 கோடி ரூபாய் அளவிலான தொகையை அளிக்கமுடியாமல் திவாலாக அறிவிக்கப்பட்டு இந்நிறுவனத்திற்கு தீர்வு காண NCLT ஒப்புதல் அளித்தது.
இதை தொடர்ந்து பல மாத ஆய்வுகள், விண்ணப்பங்கள், போட்டிகள், ஆலோசனைக்கு பின்பு ஹிந்துஜா குரூப்-ன் இண்டஸ்இந்த் இண்டர்நேஷ்னல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ரிலையன்ஸ் கேப்பிடல் வர்த்தகம் அனைத்தையும் மொத்தமாக 9650 கோடி ரூபாய்க்கு கைப்பற்றுவதாக அறிவித்து, இறுதி போட்டியில் ஜூலை 3 ஆம் தேதி தேர்வானது.

தற்போது ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தை கைப்பற்றுவதற்காக ஹிந்துஜா குடும்பம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக ஹிந்துஜா குடும்பம் தற்போது Farallon Capital, Oaktree, Ares Asia மற்றும் Cerberus ஆகிய முன்னணி முதலீட்டாளர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தை கைப்பற்றுவதற்கான சட்ட பணிகள் முடிய குறைந்தது 3 முதல் 6 மாதமாகும். இதற்குள் ஹிந்துஜா குரூப் 9650 கோடி ரூபாய் நிதி அல்லது நிதிக்கான ஆதாரத்தை தேடி ரிலையன்ஸ் கேப்பிடல் கடன் வாங்கியவர்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
திவாலாகியுள்ள அனில் அம்பானி கட்டுப்பாட்டில் இருந்து அனல் மின் நிலையம் கடனை செலுத்து முடியாத காரணத்தால் IBC விதிகள் படி அனில் அம்பானி கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறியது. இந்த அனல் மின்நிலையத்திற்கு தீர்வு காணும் பணிகள் நடைபெற்று வருவதால் கௌதம் அதானி களத்தில் இறங்கியுள்ளார்.
விதர்பா இண்டஸ்ட்ரீஸ் பவர் லிமிடெட் நிறுவனம் நிலக்கரியால் இயங்க கூடிய மின் உற்பத்தி நிலையம், இது மத்திய இந்திய பகுதியில் அமைந்துள்ளதால் அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகளை கொண்டு உள்ளது. இதனால் இந்த மின் உற்பத்தி நிலையத்தை கைப்பற்றும் போட்டியில் இறங்கியுள்ளார்.
அதானி குழுமம் சமீபத்தில் தான் 2.8 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டி சிறப்பான நிதி நிலையில் உள்ளது. இது மட்டும் அல்லாமல் மின்சார உற்பத்தியில் ஏற்கனவே கொடிகட்டி பறக்கும் அதானி பவர் நிறுவனம் விதர்பா இண்டஸ்ட்ரீஸ் பவர் லிமிடெட்-ஐ கைபற்றினால் அதானி குழுமத்தின் வர்த்தகம் மேம்படும்.


Click it and Unblock the Notifications