அனில் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் ஆவார். அனில் அம்பானி ரிலையன்ஸ் குரூப்பின் தலைவராக உள்ளார். உலகின் 6வது பணக்காரராக ஒருகாலத்தில் இருந்தார். தற்போது கடும் நிதிநெருக்கடியில் சில வருடங்களாக சிக்கியிருக்கிறார்.
அனில் அம்பானியின் சொத்துக்களில் மிகவும் விலை உயர்ந்தது, மும்பையில் இருக்கும் அவரது பாலி ஹில்லில் உள்ள வீடு. பாலிவுட் நடிகை டினா அம்பானியை அனில் அம்பானி திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஜெய் அன்மோல் அம்பானி, ஜெய் அன்ஷுல் அம்பானி என இரு மகன்கள் இருக்கின்றன. இவர்கள் மும்பையில் உள்ள 17 மாடி சொகுசு அடுக்குமாடியில் வசித்து வருகின்றனர்.

அனில் அம்பானியின் மும்பை வீட்டின் மதிப்பு ரூ.5000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள விலை உயர்ந்த வீடுகளில் இதுவும் ஒன்று. அனில் அம்பானியின் வீடு மும்பையின் பாலி ஹில்லில் அமைந்துள்ளது. இந்த சொத்து சுமார் 16 ஆயிரம் சதுர அடியில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஹெலிபேடு வசதியுடன் உள்ளது. இங்கு திறந்தவெளி நீச்சல்குளம் மற்றும் ஜிம்னாசியம் உள்ளது.
இந்த வீட்டுக்கு அபோடு என்று குடும்பத்தார் பெயர் சூட்டியுள்ளனர். இதற்கு அர்த்தம் இந்த வீடுதான் நீங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம். கட்டடத்தின் உயரம் சுமார் 66 மீட்டர்களாகும். இதுதவிர பார்க்கிங் இடம், லவுஞ்சு பகுதியும் இந்த வீட்டில் உள்ளது. அனில் அம்பானிக்குச் சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ், லெக்சஸ் எக்ஸ்யூவி, போர்ஷே, ஆடி க்யூ7, மெர்சிடஸ் ஜிஎல்கே350 ஆகிய சொகுசு கார்கள் உள்ளன.
அனில் அம்பானியின் சொகுசு வீடு மும்பையின் மூன்றாவது விலை உயர்ந்த வீடாகும். இதன் மதிப்பு ரூ.5000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதேவேளையில் முகேஷ் அம்பானி நீடா அம்பானியின் ஆன்டிலியா வீட்டின் மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடிக்கும் மேல் எனத் தெரிகிறது.
அனில் அம்பானி வீட்டின் இன்டீரியர் டிசைன்களை வெளிநாட்டு கலைஞர்கள் வந்து செய்தனர். கலைநயத்துடன் செய்யப்பட்ட சோபா செட்கள், ரெக்லைனர்கள், விலை உயர்ந்த சீலிங் விளக்குகள் நிறைந்திருக்கும்.
முகேஷ் அம்பானியின் வீட்டில் 27 மாடிகள் உள்ளன. இந்த வீட்டில் முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதா அம்பானி, மகன் ஆனந்த் அம்பானி, ஷ்லோகா அம்பானி வசித்து வருகின்றனர். இந்த ஆடம்பர வீட்டில் சமையல், பராமரிப்பு, கார் ஓட்டுனர் என 600 பேர் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் பல லட்சங்களில் சம்பளம் வழங்குகின்றனர். அல்டாமவுண்ட் சாலையில் இந்த வீடு அமைந்துள்ளது. சுமார் 4 லட்சம் பரப்பளவில் இந்தச் சொத்து அமைந்துள்ளது.
2006 ஆம் ஆண்டில் ஆன்டிலியா கட்டத் தொடங்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. வீட்டை வடிவமைத்தவர்கள் பெர்கின்ஸ் அண்டு வில்ஸ் மற்றும் ஹிர்ஷ் பெட்னர் அசோசியேட்ஸ் ஆவர். இங்கு 6 மாடி கார் பார்க்கிங் வசதி உள்ளது. தனியார் திரையரங்கம், 3 ஹெலிபேடுகள், தொங்கும் தோட்டம், ஐஸ்கிரீம் பார்லர் உள்ளன.


Click it and Unblock the Notifications