மும்பை: தான் திவாலானதாகவும், தனது சொத்து மதிப்பு ஜீரோ என்றும் பிப்ரவரி 2020 இல் இங்கிலாந்து நீதிமன்றத்தில் அனில் அம்பானி அறிவித்தார். இந்த நிலையில், மோசமான காலத்தில் இருந்து மீண்டு வந்து தற்போது அவர் கடனை திருப்பிச் செலுத்த துவங்கியுள்ளார்.
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் பவர் கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் டிபிஎஸ் வங்கி ஆகிய மூன்று வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனைத் தீர்த்தது, அதே நேரத்தில் அதன் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ஜேசி ஃப்ளவர்ஸ் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு ரூ.2,100 கோடியை செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

"ரிலையன்ஸ் பவர் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் கடனற்ற நிறுவனமாக மாறுவதை இலக்காக கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் கணக்கு புத்தகங்களில் உள்ள ஒரே கடன் ஐடிபிஐ வங்கியின் செயல்பாட்டு மூலதனக் கடன் மட்டுமே" என்று வணிக வங்கியின் மூத்த நிர்வாகி கூறியுள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மூன்று கடனாளிகளும் கூட்டாக சுமார் 400 கோடி ரூபாய் பெற்றுள்ளனர், இது அவர்களின் முதன்மைக் கடனில் 30-35% மீட்டெடுத்துள்ளனர் என்று மற்றொரு கடன் வழங்குபவர் கூறினார்.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சி, ஜனவரி 7ஆம் தேதி பங்குச்சந்தைக்கு வழங்கப்பட்ட அறிவிப்பின்படி, ஒரு ஸ்டாண்ட்ஸ்டில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆரம்பத்தில் இந்த ஸ்டாண்ட்ஸ்டில் ஒப்பந்தம் மார்ச் 20, 2024 வரை இருந்தது இது சமீபத்தில் மார்ச் 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டது என்று ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின் படி, JC Flowers ARC நிறுவனம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்-க்கு எதிராக மார்ச் 31 வரை எவ்விதமான சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது, இதற்குக் கடனை தீர்க்க போதுமான நிதியை ஏற்பாடு செய்ய நிறுவனம் கால அவகாசம் பெறும் என்பது தான் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் பவர் மார்ச் 13 அன்று VFSI ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து 240 கோடி ரூபாய் ஈக்விட்டி நிதியை திரட்டியது, வங்கிகளின் நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்கு இந்த வருமானம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. VFSI ஹோல்டிங்ஸ் என்பது உலகளாவிய சொத்து மேலாளரான வார்டே பார்ட்னர்ஸின் துணை நிறுவனமாகும்.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் பவர் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட கடன்கள் உட்பட, அசல் கடன் வழங்குநரான யெஸ் பேங்க், அதன் ரூ.48,000 கோடி கடன் புத்தகத்தை JC Flowers ARC க்கு மாற்றியுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications