மும்பை: அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிசக்தி சேமிப்பு துறையில் கால் பதித்துள்ளது. அண்மையில் இந்திய சோலார் எனர்ஜி கழகம் நடத்திய பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்களுக்கான (battery energy storage system) ஏலத்தில் பங்கேற்று முக்கியமான ஒப்பந்தத்தை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்திற்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இந்திய சோலார் எனர்ஜி கழகத்திடமிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சேமிப்பு திட்டம் தொடர்பான ஒரு புதிய ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

500 மெகாவாட் / 1000 மெகாவாட் திறன் கொண்ட பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பினை நிறுவுவதற்கு ரிலையன்ஸ் பவர் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்திய சோலார் எனர்ஜி கழகத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் ரிலையன்ஸ் பவருக்கு இந்த திட்டம் கிடைத்தது தெரியவந்துள்ளது.
இதன்படி build, own, and operate (BOO) அடிப்படையில் அதாவது கட்டமைத்தல், சொந்தமாக வைத்து செயல்படுத்துதல் என்ற அடிப்படையில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. 1000/ 2000 மெகாவாட் அளவிலான பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்களை கட்டமைப்பதற்கான ஒப்பந்தம் கோரும் பணியை இந்திய சோலார் எனர்ஜி கழகம் அறிவித்தது.
இதில் 500 முதல் 1000 மெகாவாட் அளவிலான பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் யூனிட்டுகளை அமைக்கும் ஒப்பந்தம் ரிலையன்ஸ் பவருக்கும், மீதமுள்ள 500 மெகாவாட் மற்றும் 1000 மெகாவாட் திறன் உள்ள ஸ்டோரேஜ் அமைப்புகளை அமைக்கும் ஒப்பந்தம் ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தின் துணை நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்த புள்ளி கோரப்பட்ட போது பல்வேறு நிறுவனங்களும் கலந்து கொண்டன. ஆனால் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இருப்பதிலேயே மிகக் குறைந்த அளவாக அதாவது ₹3.81999 lakh/MW/month என்ற அடிப்படையில் குறைந்த விலைக்கு ஒப்பந்தம் கோரியதாகவும், எனவே அவர்களுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இந்த ஸ்டோரேஜ் மையத்தை ராஜஸ்தானில் அமைக்க முடிவு செய்துள்ளது. அடுத்த 26 மாதங்களில் இது செயல்பட தொடங்கும் என்று சொல்லப்படுகிறது . இந்தியாவில் தற்போது பேட்டரி ஸ்டோரேஜ் சிஸ்டமர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த துறையில் தற்போது டாடா பவர், ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி மற்றும் அதானி குழுமம் ஆகியவை தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. முதன்முறையாக ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இதில் கால் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications