Anil Dhirubhai Ambani Group (ADAG) என்கிற பெயரில் அண்ணன் முகேஷ் அம்பானி உடன் சண்டை போட்டு பிரிந்து வந்து வியாபாரம் செய்யத் தொடங்கிய தம்பி அனில் அம்பானிக்கு கட்டம் ரொம்பவே சரி இல்லை. திரும்பிய பக்கம் எல்லாம் நஷ்டம் தான்.
சமீபத்தில் கடனை அடைக்க சிரமப்பட்டது எல்லாம் போக, இனி தனக்கு இந்த கடன் கொடுக்கும் நிதி சார் வியாபாரமே வேண்டாம் எனச் சொன்னது குறிப்பிடத்தக்கது.
அதோடு இனி ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், கடன் கொடுக்கும் வியாபாரத்தில் ஈடுபடாமல், வெறுமனே பங்குகளை வைத்திருக்கும் ஹோல்டிங் நிறுவனமாக இருக்கும் என ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ராஜினாமா
இந்த களேபரங்கள் எல்லாம் இப்போது வரை ஓய்ந்த பாடில்லை. அதற்குள் இன்னொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் அனில் அம்பானி. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என்கிற ஆர் காம் நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்து வெளியேறி இருக்கிறார். இதற்கு காரணம் என்ன..? என்று கேட்டால் செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
செப்டம்பர் 2019
2019 - 20 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டான ஜூலை - செப்டம்பர் 2019 காலத்தில் மட்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 30,142 கோடி ரூபாய் நஷ்டம் காட்டி இருக்கிறார்கள். இந்த மோசமான காலாண்டு முடிவுகள் வெளியான பின் தான், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து, ஒவ்வொரு இயக்குநராக தங்கள் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.
எத்தனை பேர்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர்களில், அனில் அம்பானி, சாயா விரானி, ரெய்னா கரானி, மஞ்சரி கக்கர், சுரேஷ் ரங்காசார் என பலரும் ராஜினாமா செய்து இருக்கிறார்களாம். இவர்களோடு ஆர் காம் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாகவும், இயக்குநர் குழுவிலும் இருந்த மணிகண்டனும் ராஜினாமா செய்து இருக்கிறாராம். எப்படி 30,000 கோடி ரூபாய் நஷ்டம் வந்தது எனக் காரணம் கேட்டால், லைசென்ஸ் கட்டணம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் காட்டுகிறார்கள். அதென்ன லைசென்ஸ் கட்டண பிரச்சனை.
பிரச்சனை
மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு டெலிகாம் நிறுவனத்தின் வருவாய்க்கு தகுந்தாற் போல, லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரத்துக்கும் கட்டணங்களை நிர்ணயிப்பார்கள். அப்படி கணக்கிடும் போது, நிறுவனங்கள் ஒரு மாதிரியும், அரசு டெலிகாம் துறை வேறு ஒரு மாதிரியும் கணக்கு செய்துவிட்டார்கள். அது தான் இந்த பிரச்னையில் அடி நாதமே..!
வருவாய் கணக்கு
டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சரி செய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) அடிப்படையில் தான், மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு நிறுவனத்துக்குமான லைசென்ஸ் கட்டணங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை நிர்ணயிக்கிறார்கள். இப்போது இந்த சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யில் எதை எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும், எந்த வருமானத்தை எல்லாம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் தான் சிக்கல்.
அரசு தரப்பு கணக்கு
மத்திய டெலிகாம் துறையோ, சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) கணக்கீட்டில் டிவிடெண்டுகள், மொபைல் போன்களை விற்று வரும் வருமானம், ஸ்கிராப் பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மூலம் வரும் வருமானம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் லைசன்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை கணக்கிட வேண்டும். டெலிகாம் சேவையில் இருந்து வரும் வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணங்களை நிர்ணயிக்கக் கூடாது என வாதிட்டது.
நிறுவனங்கள் வாதம்
ஏர்டெல், வோடபோன் ஐடியா,போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்களோ, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெலிகாம் சேவை வழியாக கிடைக்கும் வருவாயை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை கணக்கிட வேண்டும். மற்ற எந்த வருமானத்தையும் கூடுதலாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என வாதாடியது. இந்த வழக்கு சுமாராக கடந்த 14 ஆண்டுகளாக நடந்தது.
உச்ச நீதிமன்ற கணக்கு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ஒரு பழைய டெலிகாம் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய டெலிகாம் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யின் படி பார்த்தால், டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் சேவை வழியாக வரும் வருமானம் போக, மற்ற சில வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய டெலிகாம் துறை கணக்கிட்டு கோரியது போல, டெலிகாம் சேவை வருவாய் + மற்ற வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கேட்கும் லைசென்ஸ் தொகை சரியே என தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.
ப்ளூம்பெர்க் கணக்கு
உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசுக்கு சாதகமாகவும், டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராகவும் வந்து இருப்பதால், அனில் அம்பானியின் ஆர் காம் என்றழைக்கப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
லைசென்ஸ் கட்டணம் மட்டும் 3,632 கோடி ரூபாய்
லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்ததற்கான வட்டி 7,681 கோடி ரூபாய்
லைசென்ஸ் கட்டணத்தை செலுத்தாதற்கான அபராதம் 1,789 கோடி ரூபாய்
அபராதத்தை செலுத்தாதற்கான வட்டி 3,355 கோடி ரூபாய் என ஒட்டு மொத்தமாக சேர்த்துப் பார்த்தால் 16,456 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறதாம். லாபமே வராத கம்பெனி 16,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றால் எப்படி செலுத்துவார்கள். அதான் ராஜினாமா செய்துவிட்டார்கள் போல.
மோசமான காலாண்டு
இந்த செப்டம்பர் 2019 காலாண்டில், இந்தியாவின் பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து மிகக் கொடூரமான நஷ்டத்தைக் கணக்கு காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஏர்டெல் சுமாராக 23,000 கோடி ரூபய நஷ்டம் காட்டியது. வொடாபோன் ஐடியா சுமாராக 50,020 கோடி ரூபாய் நஷ்டம் காட்டியது. இப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 30,000 கோடி ரூபாய் நஷ்டம் காட்டி இருக்கிறது. அரசு என்ன செய்யப் போகிறதோ தெரியவில்லை. இந்திய டெலிகாம் துறையை எப்படி மீட்கப் போகிறது எனத் தெரியவில்லை.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications