ஒரு காலத்தில் உலகின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவராக வலம் வந்த அனில் அம்பானி தற்போது பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகிறார். அவரது நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்தது, அதிக கடன் சுமை போன்றவையே அனில் அம்பானியின் தற்போதைய நிலைக்கு காரணம்.
இவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்) ஒரு சமயத்தில் இந்தியாவின் வெற்றிகரமான தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்தது. அனில் அம்பானிக்கு முன்பு பல கோடிகளை லாபமாக கொடுத்த இந்நிறுவனமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். 2010 ஜனவரி 10ம் தேதியன்று ஆர்காம் பங்கு விலை வரலாறு காணாத அளவுக்கு ரூ.820.80ஆக உயர்ந்தது. அப்போது அனில் அம்பானி கையில் இருந்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்கு மதிப்பு ரூ.152 கோடியாக இருந்தது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று முன்தினம் பங்கு வர்த்தகத்தின் முடிவில் ஆர்காம் பங்கு விலை ரூ.2.49ஆக இருந்தது. இன்று ஆர்காம் பங்குகள் IBC விதிகள் படி வர்த்தகம் செய்ய முடக்கப்பட்டு உள்ளது. தற்போதைய 2.37 ரூபாய் பங்கின் விலையில் பார்த்தால், அந்த நிறுவனத்தில் அனில் அம்பானி வைத்திருக்கும் பங்கு மதிப்பு ரூ.1 கோடி கூட இல்லை.
2023 செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி ஆர்காம் நிறுவனத்தின் 18.59 லட்சம் பங்குகளை அனில் அம்பானி வைத்திருக்கிறார். இந்த பங்குகளின் மொத்த மதிப்பு தற்போது ரூ.45.லட்சத்துக்கும் குறைவு. இது அவரது அண்ணன் முகேஷ் அம்பானி தினமும் நன்கொடையாக வழங்கும் தொகையில் பாதிக்கும் குறைவாகும். ஹூருன் இந்தியா தொண்டு பட்டியில் 2023ன்படி, முகேஷ் அம்பானி சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.1.03 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் விலை கடந்த இரண்டுகளில் 36.80 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 84.21 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதேசமயம் கடந்த 10 ஆண்டுகளில் ஆர்காம் பங்கு விலை 98.09 சதவீதம் சரிவு கண்டுள்ளது.
அண்மையில் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் சொத்து (நிலம், கட்டிடம்) விற்பனைக்கு மும்பையில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications