ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானி மீது பொருளாதார குற்ற வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரம் மும்பை மற்றும் டெல்லியில் ரிலையன்ஸ் குரூப்-க்கு தொடர்புடைய 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் ஒரு கட்டமாக 50 நிறுவனங்களும் 25 பேரும் PMLA கீழ் விசாரணையில் உள்ளனர்.
இந்த நிலையில் அனில் அம்பானி-க்கு ரூ.17,000 கோடி கடனை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கில், ஆகஸ்ட் 5ஆம் தேதி அமலாக்க துறை தலைமையகத்தில் அனில் அம்பானியை நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ் நிறுவனத்தின் நிதி முறைகேடு வழக்குகளில் அனில் அம்பானிக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. SEBI அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனம், CLE பிரைவேட் லிமிடெட் என்ற தொடர்புடைய நிறுவனத்தின் மூலம் கடன் தொகையை முறைகேடாக மாற்றி பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதுக்குறித்து விரிவாக பார்ப்போம்.
அனில் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் குரூப்-ல் நடைபெற்ற மோசடிகள் குறித்து செபி தனிப்பட்ட முறையில் விசாரணை செய்தது. இந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களை செபி அமைப்பு அமலாக்க துறை மற்றும் மற்ற இரண்டு நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (R Infra) ஆல் ரூ.10,000 கோடி பணத்தை தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. SEBI அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் இந்த 10000 கோடி ரூபாய் பணத்தை CLE Pvt Ltd என்ற மறைக்கப்பட்ட தொடர்பு நிறுவனத்தின் மூலம் இடைநிறுவன கடன்களாக (ICDs) மாற்றி, ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கு திருப்பியதாக கூறப்படுகிறது. CLE நிறுவனம் விசாரணையின் போது "C" நிறுவனமாக அடையாளம் காணப்பட்டு, இந்த நிதி பரிமாற்றம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதில் முக்கியமாக ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிர்வாகம் CLE Pvt Ltd மூலம் நடைபெற்ற பண பரிமாற்றங்கள் மற்றும் இடைநிறுவன கடன்கள், பங்குதாரர்களிடம் அல்லது ஆடிட்டர்களிடம் தெளிவாக வெளிப்படுத்தப்படாமல் இருந்ததாக SEBI குற்றம் சாட்டுகிறது.
இந்த நடவடிக்கைகள், பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்துவதற்கு ஒரு நன்கு திட்டமிடப்பட்ட திட்டமாக இருக்கலாம் என்று அமலாக்க துறை சந்தேகிக்கிறது. இதனால் நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications