மும்பை: அம்பானி குடும்பம் என்றாலே அவர்களின் ஆடம்பர வாழ்க்கை நம் கண் முன் தோன்றும். தற்போது ஆனந்த் அம்பானியின் திருமண வைபோகத்திற்காக அம்பானி குடும்பமே தயாராகி வருகிறது.
இந்நிலையில் திருமண நிகழ்வில் பங்கேற்கும் பொருட்டு இத்தாலிக்கு செல்வதற்காக முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது பயன்படுத்திய கார் தான் தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.

அனில் அம்பானி தன்னுடைய புதிய எலக்ட்ரிக் காரில் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்த காரை தான் அனில் அம்பானி பயன்படுத்துகிறார். சர்வதேச அளவில் டெஸ்லாவை விட அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் தான் பிஒய்டி.
பிஒய்டி அண்மையில் இந்தியாவில் பிஒய்டி சீல் என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. இந்தியாவில் மிக சொற்பமானவர்களே இந்த காரை வாங்கியுள்ளனர். அவர்களின் பட்டியலில் அனில் அம்பானியும் இருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அம்பானி குடும்பத்தினர் பல்வேறு சொகுசு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அதில் தற்போது பிஓய்டி நிறுவனத்தின் சீல் எலக்ட்ரிக் வாகனமும் சேர்ந்துள்ளது. இவர்களிடம் கிட்டதட்ட 200 ஆடம்பர கார்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் அதில் விலை குறைந்த காராக பிஒய்டி சீல் கார் இருக்கும். அனில் அம்பானி ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரராக இருந்தவர். ஆனால் தற்போது திவால் நிலையில் இருக்கிறார்.
இந்த காரின் ஆரம்ப விலை 41 லட்சம் ரூபாய் ஆகும். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற எலக்ட்ரிக் வாகன கண்காட்சியில் பிஒய்டி நிறுவனம் இந்த காரை அறிமுகம் செய்தது. இந்தியாவில் சுமார் 1000 பேர் இதனை வாங்க முன்பதிவு செய்தனர். சர்வதேச சந்தையில் இந்த கார் 61.4kWh மற்றும் 82.5kWh என்ற வகைகளில் கிடைக்கிறது.
இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 5.9 நொடிகளில் எட்டிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக 53 லட்சம் ரூபாய் வரையும் இந்த கார் கிடைக்கிறது. பிஒய்டி சீல் கார் இந்தியாவில் ப்ரீமியம் மற்றும் பர்பாமன்ஸ் என்ற 2 வகைகளில் கிடைக்கிறது.
சர்வதேச அளவில் டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாக எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது சீனாவின் பிஒய்டி நிறுவனம். கடந்த ஆண்டில் விற்பனைவில் டெஸ்லாவை மிஞ்சி முதலிடத்தை பிடித்தது பிஒய்டி நிறுவனம்.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications