இந்தியப் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகளுக்கு செபி தடை விதித்துள்ளது. அது மட்டும் இன்றி 25 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் எந்த நிறுவனத்திலும் இயக்குனராகவோ நிர்வாக பொறுப்பிலோ அனில் அம்பானி இருக்கக் கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதன் காரணமாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் விளைவாக அனில் அம்பானி நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.
ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகியவற்றின் பங்குகள் ஆகஸ்ட் 23-ஆம் தேதி அன்று வீழ்ச்சியடைந்தன. அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் உட்பட 24 நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டது.

நேற்று மதியம் 12.05 மணியளவில், NSE-யில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து ரூ.210.64 ஆகவும், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5.12 சதவீதம் சரிந்து ரூ.4.45 ஆகவும் இருந்தது.
அதற்கு முந்தைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ் பவர் பங்குகள் 52 வார உயர்வை எட்டியது. ஆனால் செபியின் தடைக்குப் பிறகு, பங்குகள் கடுமையாக சரிந்து தலைகீழாக மாறியது.
அது மட்டுமின்றி செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (Sebi) அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ளது மற்றும் பட்டியலிடப்பட்ட எந்த நிறுவனத்திலும் அவர் இயக்குநர் அல்லது முக்கிய நிர்வாகப் பொறுப்பில் தொடரக் கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், செபி ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தை பத்திரச் சந்தையில் இருந்து 6 மாதங்களுக்கு தடை செய்து, அதற்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. முதலீட்டாளர்களின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் செபி தற்போது அனில் அம்பானி மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுகுறித்து செபி வெளியிட்ட தனது 222 பக்க இறுதி உத்தரவில், இந்த மோசடி உள்நோக்கத்துடன் நடந்ததாக செபி தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிதியை அனில் அம்பானி தன்னுடைய பிற நிறுவனங்களுக்கு கடன் என்ற பெயரில் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.
வருவாய் இல்லாத நிறுவனங்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கடனாக உதவியதாகவும் கூறப்படுகிறது. இது திட்டமிட்டு நடந்திருப்பதாக செபி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏனெனில் கடன் பெற்ற எந்த நிறுவனமும் அதை திருப்பிச் செலுத்தவில்லை.
இதனால் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 59.60 ரூபாயாக இருந்த RHFL நிறுவனத்தின் பங்கு விலை 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 75 பைசாவாக சரிந்தது. இதன் காரணமாக அனில் அம்பானிக்கு 25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications