இந்திய வர்த்தக சந்தையில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குரூப்-ன் புதிய குரூப் பிரெசிடென்ட் ஆக பருல் ஷர்மா நியமிக்கப்பட்டு உள்ளார். பருல் ஷர்மா-வின் பதவி காலம் ஜூன் 20 ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக ரிலையன்ஸ் குரூப் தெரிவித்துள்ளது.
பருல் ஷர்மா தகவல்தொடர்பு மூலோபாய வல்லுநராக பல ஆண்டு காலம் அனுபவம் கொண்டு இப்பதவிக்கு வந்துள்ளார்.

பருல் ஷர்மா 15 ஆண்டுகளாக ரூபர்ட் முர்டோக்-கிற்கு சொந்தமான ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தகவல் தொடர்பு உத்தி பிரிவை வழிநடத்தினார். இந்த பதவி காலத்தில் ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் குழுமத்தின் கார்ப்பரேட் இமேஜ், விளம்பரம் மற்றும் வணிக உறவுகள் உட்பட பல பிரிவுகளை கவனித்துக்கொண்டார்.
ஸ்டார் இந்தியா பதவிக்கு முன்பு அவர் ஜெர்மனி நாட்டின் Cologne என்னும் பகுதியை தலைமையிடமாக கொண்ட ஜெர்மன் பிராக்கால்டிங் நிறுவனமான Deutsche Welle உடன் பணியாற்றி இருந்தார். பல முக்கிய பதவிகளில், பல வருடம் அனுபவம் கொண்ட பருல் ஷர்மா ரிலையன்ஸ் குரூப்-ன் புதிய தலைவராக டெல்லியில் இருந்து பணியாற்ற உள்ளார்.



Click it and Unblock the Notifications