உலக பணக்காரர்கள் என்றதுமே நினைவுக்கு வருவது முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி போன்ற முன்னணி பணக்காரர்கள் பெயர் தான். ஆனால் 2008-ஆம் ஆண்டிலேயே அனில் அம்பானி தனது மூத்த சகோதரரான முகேஷ் அம்பானியை விஞ்சி உலக அளவில் ஆறாவது பணக்காரராக இடம் பிடித்தார். அனில் அம்பானி பணக்காரராக பட்டியலிடப்பட்ட நேரத்தில் ரிலையன்ஸ் ஏடிஏ குரூப் என்று அழைக்கப்படும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார். அந்த சமயத்தில் வெளியான ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி 42 பில்லியன் டாலர் நிகர மதிப்பை கொண்டிருந்தார். இது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.350 கோடி.
2006-ஆம் ஆண்டு அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் இணைந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை தொடங்கினர். அதன் பிறகு அவர்கள் இருவரும் பிரிந்து அனில் அம்பானி ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் போன்ற நிறுவனங்களை நிர்வகிக்க தொடங்கினார். ரிலையன்ஸ் பவர் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவை மேற்பார்வையிடும் ஆதிக்கத்தை அனில் அம்பானி கையில் எடுத்துக் கொண்டார்.

அனில் அம்பானி அதோடு நிற்கவில்லை அவருடைய செல்வாக்கை பொழுதுபோக்கு துறையிலும் பரப்பத் தொடங்கினார். அவர் Adlabs ஃபிலிம்ஸில் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ட்ரீம்வொர்க்ஸுடன் 1.2 பில்லியன் டாலர் முதலீடு செய்தார். இந்த முதலீடு பொழுதுபோக்கு துறையிலும் அவருடைய சாதனையை நிலை நிறுத்த உதவியது.
ஆனால் 2020-ஆம் ஆண்டு அனில் அம்பானிக்கு சிக்கல் தரும் ஆண்டாக மாறியது. அவர் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டார். இதனால் ஆண்டின் பிப்ரவரி மாதம் அவருடைய நிகர மதிப்பு குறைந்தது. அனில் அம்பானியின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடெட் 2020-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 20,379.71 கோடி கடன் இருப்பதாக அறிவித்தது.
இது போன்ற சவால்கள் தொடர்ந்து இருந்தபோதிலும், அனில் அம்பானியின் மகன்களான ஜெய் அன்மோல் மற்றும் ஜெய் அன்ஷுல் ஆகியோர் நிறுவன செயல்பாடுகளை மீண்டும் நிர்வகிக்கத் தொடங்கினார். அவர்களுடைய விடாமுயற்சி ரிலையன்ஸ் பவரின் பங்கு மதிப்பை உயர்த்தத் தொடங்கியது. மேலும் ஜப்பானின் நிப்பான் முதலீடுகள் புதிய உந்துதலாக செயல்பட்டது.
தற்போது அனில் அம்பானி நிகர மதிப்பு சுமார் 29.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இந்திய மதிப்பின்படி ரூ. 249 கோடியாகும். ரிலையன்ஸ் குழுமத்தின் சந்தை மதிப்பும் மீண்டு ரூ.10,759 கோடியாக உள்ளது. வணிக ரீதியாக சில சவால்கள் இருந்த போதிலும் அனில் அம்பானி தனது குடும்பத்துடன் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
அனில் அம்பானி முன்னாள் பாலிவுட் நடிகையான டினா முனிமை 1991-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த ஜோடி மும்பையின் பாலி ஹில் பகுதியில் அமைந்திருக்கும் "அபோட்" என்ற 14 மாடி மாளிகையில் வசித்து வருகின்றனர். இந்த 16,000 சதுர அடி வீட்டில் ஸ்விம்மிங் பூல், மாடி தோட்டங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கேரேஜ்கள் மற்றும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஒரு ஒரு தளம் இருக்கிறது. இந்த வீட்டின் மதிப்பு சுமார் 5000 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ரூ.311 கோடி மதிப்புள்ள பாம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் எக்ஸ்ஆர்எஸ் பிரைவேட் ஜெட் விமானமும் அம்பானிகளிடம் உள்ளது. அனில் அம்பானி மட்டுமின்றி முகேஷ் அம்பானியும் புதிய விமானங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர். அனில் அம்பானியின் சொகுசு கார்களில் ரோல்ஸ் ராய்ஸ், லெக்ஸஸ் எஸ்யூவி, ஆடி க்யூ7, மெர்சிடிஸ் ஜிஎல்கே ஆகியவை உள்ளன. தற்போது அனில் அம்பானி அவருடைய மகன்கள் மற்றும் மருமகள் ஆகியோர் அபோட் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications