அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: இருவரில் யார் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்?

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில் அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணமும், நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பும் நடைபெற இருக்கிறதாம். இதற்காக கலாநிதி மாறன் தரப்பில் பத்திரிக்கை வைக்கும் நிகழ்வுகள் தொடங்கி இருக்கின்றன. இந்த சமயத்தில் இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரில் யார் அதிக சொத்து மதிப்பு கொண்டவர் என்ற விவரங்களை பார்க்கலாம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: இருவரில் யார் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்?

அனிருத் ரவிச்சந்தர் தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத இசையமைப்பாளர். இவரது சொத்து மதிப்பு சுமார் 50 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு பல கோடி ரூபாய் ஊதியமாக பெறுகிறார். மேலும் திரைப்பட பின்னணி இசை, ஆல்பங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் தோன்றுவதன் மூலம் பெருமளவு வருமானம் ஈட்டுகிறார்.

ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து உச்சம் தொட்ட அனிருத், ஷாருக்கான் படங்களின் மூலமும் வட இந்தியாவிலும் கவனம் ஈர்த்தார். கொலவெறி பாடல் மூலம் திரை உலகில் கவனம் பெற்று ராக் ஸ்டாராக உயர்வு பெற்றுள்ளார். அனிருத் இசை அமைத்தாலே படம் ஹிட் என்ற நிலையை கொண்டு வந்துள்ளார்.

Also Read

காவ்யா மாறன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை உரிமையாளராக இருப்பவர். இவரது செல்வம் பெருமளவில் 'சன் குரூப்' சாம்ராஜ்யத்திலிருந்து வருகிறது. இதில் சன் டிவி நெட்வொர்க் , சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஐபிஎல் கிரிக்கெட் அணி, நிறுவனப் பங்குகள் , லாப ஈவுத்தொகை மற்றும் பிற வணிக முதலீடுகள் அடங்கும்.

கலாநிதி மாறன் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான சன் குரூப்பை நடத்தி வருகிறார். சன் குழுமத்தின் மொத்த மதிப்பே சுமார் 24,000 கோடி ரூபாய் ஆகும். இவரது ஒரே மகள் தான் காவ்யா மாறன். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த காவ்யா, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பயின்றார். பின்னர் இங்கிலாந்து சென்று வார்விக் பிசினஸ் ஸ்கூலில் உயர் கல்வி பயின்றார்.

Recommended For You

கடந்த 8 ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை காவ்யா மாறன் மேலாண்மை செய்கிகிறார். காவ்யா மாறனின் வருகைக்கு பின் SRH அணியின் அடையாளம் முற்றிலுமாக மாறியுள்ளது. அணியின் பிராண்டிங் , வீரர்களை தேர்ந்தெடுக்கும் முறை என அனைத்திலும் இவரது தாக்கம் உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் SRH அணி விளையாடும் போதெல்லாம் கேமராக்கள் எல்லாம் இவரது ரியாக்‌ஷன்களையே கவர் செய்யும்.

அனிருத் ரவிச்சந்தரின் வருமானம் பெரும்பாலும் திரைப்படங்கள், இசை ஆல்பங்கள் மற்றும் விளம்பரங்களை அடிப்படையாக கொண்டது. மாறாக, காவ்யா மாறனின் செல்வம் தந்தையின் சொத்து ஐபிஎல் அணி உரிமையின் மூலம் வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+